சுரேஷ் ரெய்னாவை அறிமுகப்படுத்தும் ட்ரீம் நைட் ஸ்டோரீஸ்

ட்ரீம் நைட் ஸ்டோரீஸ், என்ற புதிய நிறுவனம் தனது முதல் படத்தை அறிவித்துள்ளது. மான் கராத்தே ரெமோ, கெத்து போன்ற படங்களிலும் விரைவில் வெளியாகவிருக்கும் ரெட்டத்தல திரைப்படத்தில் டயலாக் ரைட்டராகவும் பணியாற்றிய லோகன் இயக்குகிறார். இந்த படத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா நாயகனாக நடிக்கிறார்.

இந்திய அணியின் முன்னணி வீரர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆட்டக்காரர் ஷிவம் டூபே, இதன் துவக்க விழாவில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசும்போது “இது ஒரு வரலாற்றுப் பொழுது. இத்தகைய ஒரு படத் திட்டத்தின் தொடக்கத்தில் இருக்கிறேன் என்பது பெருமை!, இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் என் வாழ்த்துக்கள்” என்றார்.

AGS என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தில் தயாரிப்பு பொறுப்பாளராக பணியாற்றிய டி. சரவணகுமார், படத்தை தயாரிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார், சந்தீப் விஜய் ஒளிப்பதிவு செய்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.