டைம் டிராவலை பயன்படுத்தி விதவிதமான படங்கள் வந்திருந்தாலும் முதன் முறைய உணர்வு பூர்வமாக, வித்தியாசமான கதையைக வந்திருக்கிறது. குழந்தைகளி ஆசையை தீர்த்து வைக்கும் அப்பாக்களின் கதைகளுக்கு மத்தியில் அப்பாவின் ஆசையை தீர்த்து வைக்கும் மகனின் கதை இது. தந்தையின் நிறைவேறாத பால்ய பருவ ஆசைகளை நிறைவேற்றி வைக்க டைம் டிராவல் மூலம் தனது தந்தை சிறுவனாக இருந்த காலத்துக்கே செல்லும் 8ம் வகுப்பு படிக்கும் மகன் அவரது ஆசைகளை எப்படி தீர்த்து வைக்கிறான் என்பதுதான் கதை.
தந்தையின் கஷ்ட்டமான சிறு வயது வாழ்க்கையை நினைத்து கலங்கும் கதாபாத்திரத்தில் சிறுவன் ராகுவன் கண்கலங்க வைக்கும் வகையில் நடித்திருக்கிறார். குடும்பத்திற்காகவும், பிள்ளைகளுக்காகவும் வாழும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜய் கிருஷ்ணா, சிறப்பாக நடித்திருக்கிறார்.
விஜய் கிருஷ்ணாவின் மனைவியாக நடித்திருக்கும் ஸ்ருதி ராமகிருஷ்ணன், பாரி வாசன், ஹேமன் முருகானந்தம், தீபா உமாபதி, கிஷோர் ராஜ்குமார் ஆகியோர் தங்கள் பங்கை நிறைவாக செய்திருக்கிறார்கள்.
மூன்று காலக்கட்டங்களில் நடக்கும் கதையை மிக நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் வினோத் காந்தி. இசையமைப்பாளர் ரேஹன் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
மூன்று காலக்கட்டங்களில் நடக்கும் டைம் டிராவலர் கதையை எந்தவித குழப்பமும் இன்றி பார்வையாளர்களுக்கு எளிமையாக புரியும்படி அழகாக சொல்லியிருக்கிறார் எழுதி இயக்கியிருக்கும் சுந்தர் கிரிஷ்.
மகனுக்காக முன்னோக்கி பயணிக்கும் தந்தையின் கதை பறந்து போ. தந்தைக்காக மகன் பின்னோக்கி பயணிக்கும் கதை அனுக்கிரகன்.