‘லவ் மேரேஜ்’தான் பெஸ்ட்: விக்ரம் பிரபு

அஸ்யூர் ஃபிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டேய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் டாக்டர் ஸ்வேதா ஸ்ரீ மற்றும் ஸ்ரீநிதி சாகர் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் ‘லவ் மேரேஜ்’. இந்தத் திரைப்படத்தை தமிழகம் முழுவதும் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் விநியோகஸ்தர் சக்தி வேலன் வெளியிடுகிறார்.

சண்முக பிரியன் இயக்கி உள்ள இந்தப் படத்தில் விக்ரம் பிரபு – சுஷ்மிதா பட் நாயகன் நாயகியாக நடித்துள்ளனர். இவர்களுடன் மேஷ் திலக், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், முருகானந்தம், கோடாங்கி வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். மதன் கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசை அமைத்திருக்கிறார். வருகிற 27ம் தேதி வெளிவருகிறது.

இந்த நிலையில் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இதில் விக்ரம் பிரபு பேசியதாவது: இந்தப் படத்தின் படப்பிடிப்பு தருணத்தில் கிடைத்த மகிழ்ச்சி இதற்கு முன் எந்த திரைப்படத்தின் படப்பிடிப்பிலும் கிடைத்ததில்லை. நான் இந்தப் படத்தின் படப்பிடிப்பிற்காக கோபிசெட்டிபாளையம் செல்கிறேன் என்று அப்பாவிடம் சொன்னதும் அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். அத்துடன் மட்டும் நிற்காமல் அங்கு சென்றால் இன்னார் வீட்டுக்கு செல்… இன்னார் வீட்டுக்கு செல்.. என்று ஏராளமானவர்களை மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். அவர்களை அங்கு சந்தித்தபோது மகிழ்ச்சி இரட்டிப்பானது.

அந்தத் தருணத்திலேயே இந்த படம் நல்ல படமாக வரவேண்டும் என்ற அழுத்தம் எனக்குள் ஏற்பட்டது. இந்தப் படம் சிறப்பாக வரவேண்டும் என நான் மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த பட குழுவும் மகிழ்ச்சியுடன் பணியாற்றியது. படப்பிடிப்பு நடைபெற்ற ஒரு மாத காலம் வரை குடும்பமாக அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றினோம். இது மறக்க இயலாத அனுபவம்.
காதல் இல்லாமல் திருமணம் ‘செட்’ ஆகாது. காலம் மாறிக்கொண்டு இருக்கிறது. அதற்கேற்றபடி, படங்களும் மாறிக்கொண்டு இருக்கிறது. மக்களும் மாறிவிட்டார்கள் என்று நினைக்கிறேன். எனவே என் ஆதரவு என்றுமே காதல் திருமணங்களுக்கு தான். என்றார்.

Leave A Reply

Your email address will not be published.