குபேரா: அழுத்தமான கதையில் அபாரமான படம்

‘வாத்தி’ படத்துக்குப் பிறகு தனுஷ் நடித்துள்ள நேரடி தெலுங்கு, தமிழ் படம். இந்தியாவின் பெரிய கோடீஸ்வரர் நீரஜ் மித்ரா . அரசாங்கத்தை கைக்குள் வைத்துக் கொண்டு நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்பவர். தமிழக கடல் பகுதியில் உலகத்தரம் வாய்ந்த கச்சா எண்ணெய் கண்டுபிடிக்கப்படுகிறது. இந்த தகவல் அரசாங்கத்துக்கு முன்பே அவருக்கு கசிந்து விடுகிறது. எண்ணை கிணறை கைப்பற்ற திட்டம் போடுகிறார். இதை செயல்படுத்த ஜெயிலில் இருக்கும் முன்னாள் சிபிஐ அதிகாரி நாகர்ஜுனாவை அழைத்து வருகிறார்.

கறுப்பு பணத்தை பினாமி சொத்து மூலம் வெள்ளையாக மாற்ற சில பிச்சைக்காரர்களை பயன்படுத்தலாம் என்று ஐடியா கொடுக்கிறார் நாகார்ஜூனா. இதற்காக தேர்ந்தெடுக்கப்படும் 5 பிச்சைகாரர்களில் ஒருவர்தான் தனுஷ்.

பிச்சைக்காரர்களை பணக்காரர்கள் போல மாற்றி, பயிற்சி கொடுத்து பணத்தை கைமாற்றுகின்றனர். இதில் நீரஜ்ஜின் உத்தரவின்படி பணம் கைமாறியபின் ஒவ்வொரு பிச்சைக்காரராக கொல்லப்படுகின்றனர். இதை தெரிந்து கொள்ளும் தனுஷ் , நீரஜ் ஆட்களிடம் இருந்து தப்பிக்கிறார்.
வழியில் காதலனால் கைவிடப்பட்டு தற்கொலைக்கு முயலும் ராஷ்மிகாவை சந்திக்கிறார் எதிரிகளிடமிருந்து தனுஷ் தப்பித்தாரா? ராஷ்மிகாவின் பிரச்சினைகள் தீர்ந்ததா?, நாகார்ஜூனா என்ன ஆனார் என்பதே படத்தின் கதை.

பரபர ஆக்ஷன் படமாக இருந்தாலும் அதை உண்மைக்கு நெருக்கமாக சொல்லி இருக்கிறார் இயக்குநர் சேகர் கம்முலா. படம் தொடங்கியதுமே வரும் எண்ணெய் படிமம், மத்திய அமைச்சருடன் ஜிம் சர்ப் போடும் டீல், தனுஷின் அறிமுகம், நாகர்ஜுனாவின் பின்னணி பரபரப்பை ஏற்படுத்துகிறது.

மொத்த படத்தையும் தாங்கி பிடிக்கிறார் தனுஷ்.அசுரத்தனமான நடிப்பு. பிச்சைக்காரனாக துணிச்சலுடன் நடித்திரு’கிறார். ராஷ்மிகா, ஜிம் சர்ப், சில காட்சிகளே வரும் சுனைனா என அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசை சூப்பர், பாடல்கள் ஏற்கெனவே ஹிட்டானவை. நிகேத் பொம்மியின் ஒளிப்பதிவில் ஒவ்வொரு பிரேமிலும் உழைப்பு தெரிகிறது. நாகர்ஜுனா – தனுஷ், தனுஷ் – ராஷ்மிகா, தனுஷ் – குஷ்பு கதாபாத்திரங்களுக்கு இடையிலான காட்சிகள் நெகிழ வைக்கிறது.

தனுஷ் மற்றும் நாகார்ஜூனா ரசிகர்களுக்கு மட்டுமல்ல பான் இந்தியா ரசிகர்களுக்கும் இந்த குபேராவை பிடிக்கும்.

Leave A Reply

Your email address will not be published.