ஜியோ ஹாட்ஸ்டார் , ஜிகேஎஸ் புரொடக்ஷன் , செவன் சீஸ் மற்றும் செவன் ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘பறந்து போ’. ராம் இயக்கி உள்ளார். மிர்சி சிவா, கிரேஸ் ஆண்டனி, மாஸ்டர் மிதுன் ரியான், அஞ்சலி, அஜு வர்கீஸ், விஜய் யேசுதாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் தயாநிதி இசை அமைத்துள்ளார். வருகிற ஜூலை 4ம் தேதி வெளியாகிறது.
இதை தொடர்ந்து படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. விழாவில் படக்குழுவினருடன் இயக்குனர்கள் மிஷ்கின், மாரி செல்வராஜ், ரஞ்சித் ஜெயக்கொடி, மீரா கதிரவன், நடிகர் சித்தார்த், தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, சுரேஷ் காமாட்சி, அருண் விஸ்வா, மாரி செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் இயக்குனர் இயக்குநர் ராம் பேசியதாவது: முதலில் இந்த படத்திற்கு யுவன் தான் இசையமைப்பதாக இருந்தது. ஆனால், அவருடைய ஷெட்யூல் அடுத்தடுத்து பிஸியாக இருந்தது. படத்திற்கும் 20 பாடல்கள் தேவைப்பட்டதால் யுவனால் அந்த ஷெட்யூலில் செய்து தர முடியாததால் தான் சந்தோஷ் உள்ளே வந்தார்.
ஜியோ ஹாட்ஸ்டார் எனக்கு வேலை செய்வதற்கு மிகவும் இலகுவான இடம். பிரதீப்பை பார்த்தாலே தனி எனர்ஜி வரும். சிவா,கிரேஸ் போன்ற திறமையான நடிகர்களை என் படத்தில் பயன்படுத்திக் கொண்டது மகிழ்ச்சி. தொழில்நுட்பக் குழுவினர் அனைவரும் சிறப்பாக வேலை செய்திருக்கின்றனர் இந்த செட்டில் தான் ரிலாக்ஸாக இருந்தேன்.
ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் இந்தப் படத்தை முதலில் பார்த்து வாழ்த்து சொன்னார். அவர் படம் பார்த்து வாழ்த்தியதுடன் உலக அளவில் வெளியிடுவது எங்களின் பெரும் பலம். படம் நிச்சயம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். என்றார்.
பாடலாசிரியர் மதன் கார்க்கி, “ராமுடன் இணைந்து நான் பணியாற்றிய படங்கள் அனைத்தும் எனக்குப் பிடித்தவை. ‘பறந்து போ’ படத்தில் வேறு ஒரு ராம் சாரைப் பார்த்தேன். இந்தப் படத்திற்கு மொத்தம் 25 பாடல்கள் எழுதினேன். அதில் 19 பாடல்கள் படத்தில் அமைந்துள்ளது. நடிகர் சித்தார்த்தும் இந்தப் படத்தில் ஒரு பாடல் பாடியிருக்கிறார்.
அண்ணன், மனைவி, மகன் என மூன்று உலகங்களுக்குள் நடக்கும் இணைப்பு- போராட்டம்தான் இந்தக் கதை. மெல்லிய சிரிப்பு இந்தப் படம் முழுக்க இருக்கும். என்னுடைய 1000 ஆவது பாடல் இந்தப் படத்தில் எழுதியிருக்கிறேன்” என்றார்.