நேர்மையான போலீஸான ரங்கராஜ் மணல் அள்ளும் பிரச்சனையில் கொல்லப்படும் ஒரு திரு நங்கையின் வழக்கை விசாரிக்கிறார். இந்த கொலைக்குப் பின் கார்பரேட் நிறுவனத்தின் தலைவன் ஒருவன் இருப்பது தெரிந்து அவனை கைது செய்து சிறையில் வைக்கிறார். ஆனால் கைது செய்த ஒரே மணி தனது அதிகாரத்தை வைத்து நேரத்தில் வில்லன் வெளியே வருகிறான். அப்படி வெளியே வந்த வில்லன் ரங்கராஜை பழிவாங்குவதும். தனது மகளை காப்பாற்ற ரங்கராஜ் எடுக்கும் அதிரடி திட்டங்கள்தான் படத்தின் கதை.
தமிழுணர்வும் , விவசாயிகளுக்கான மெசேஜும் கலந்து இந்த கமர்ஷியல் ஆக்ஷன் படத்தை தந்திருக்கிறார், இயக்குனர் ரங்கராஜ், அவரே நாயகனாக இரண்டு வேடங்களில் நடித்திருக்கவும் செய்கிறார். ஒரே படத்தில் பல கதைகளை சொல்லியிருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் மனோஜ் தன்னுடைய சிறப்பான பங்களிப்பை செய்திருக்கிறார். ரங்கராஜ் இயக்கம் நடிப்பு என இரண்டு வேலைகளையும் நிறைவாக செய்திருக்கிறார். ஸ்ருதி நாராயணனுக்கு படத்தில் முக்கிய கதாபாத்திரம் வழக்கப்பட்டுள்ளது. அதனை அவர் சிறப்பாகவே செய்திருக்கிறார். டெல்லி கணேஷ் நடித்துள்ள காட்சிகள் அவரது இழப்பை நினைவூட்டுகிறது.
நான்சி, சாய் தீனா, பிர்லா போஸ், ஸ்ரீ லேகா, அறந்தாங்கி நிஷா, பிரவீன் மஞ்சரேக்கர் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள். ஜோஸ் ஃபிராங்க்லின் இசை படத்திற்கு பலம். பக்கா ஆக்ஷன் படமா இருந்தாலும் மண்ணையும், மக்களையும் காக்க விவசாயம் முக்கியம், மண் வளம் முக்கியம் என்பதையும் படம் பேசியிருக்கிறது.