மலேசியாவிலிருந்து ஊருக்குத் திரும்பும் முகேன் ராவ், அங்கிருந்து ஒரு மாயப் பெட்டியில் அடைக்கப்பட்ட ‘ஜின்’ என்பதை வாங்கி வருகிறார். ஜின் என்பது நல்லது மட்டுமே செய்யும் ஒரு ஆவி. வெறும் பிஸ்கட் பால் மட்டுமே சாப்பிடும் அந்த சாதுவான ஜின்னை செல்லப்பிராணியாக குடும்பமே வளர்க்கிறது. ஜின் வந்த பிறகு முகேன்ராவிற் நல்லது நடக்கிறது. குடும்பத்தினருக்கு கெட்டது நடக்கிறது.
ஒரு நாள் ஜின்னின் மாய பெட்டியின் முன்னால் முகேன் ராமின் மனைவி பவ்யா திரிக்கா ரத்த வெள்ளத்தில் கிடக்க அதற்கு காரணம் ஜின் தான் கருதும் முகேன் ராவ் அதனை வெளியே வீசுகிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை.
முகேன் ராவ் நடிப்பில் ஓரளவிற்கு தாக்கு பிடிக்கிறார். காதல், பாடல் நடிப்பு என படத்தை கலர்புல்லாக்குகிறார் பவ்யா டிரிகா. சிரிக்க வைக்க முயல்கிறார் பால சரவணன். பேயைப் பார்த்துப் பயப்படும் காட்சிகளிலும், சென்டிமெண்ட் காட்சிகளிலும் வினோதினி மற்றவர்களிடமிருந்து சற்று தனித்து நிற்கிறார்.
வடிவுக்கரசிக்கு, இமான் அண்ணாச்சி தங்கள் பங்கை செய்திருக்கிறார்கள். விவேக்-மெர்வின் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசை படத்திற்கு உதவி இருக்கிறது. கமர்ஷியல் படத்திற்கு உரிய வண்ணமயமான ஒளிப்பதிவை வழங்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் அர்ஜுன் ராஜா. கிராபிக்ஸ் காட்சிகள் அளவாக இடம்பெற்று ரசிக்க வைக்கிறது.
ஆரம்பக் காட்சி முதல் இறுதிகாட்சி வரை ரசிகர்களை திகில் மோட்லேயே வைத்திருக்கிறர். இயக்குநர் டி.ஆர்.பாலா. கிமி மூலம் வரும் பின்கதை பிரமிக்க வைக்கிறது. ஜின் பேசும் விதம், அதன் குறும்புகள் குழந்தைகளை கவரும்.
கோடை கொண்டாட்டமாக வந்திருக்கிறது இந்த ஜின்.