பள்ளி முதலாளியின் உத்தரவின் பேரில் பள்ளியை முதலிடத்திற்கு கொண்டு வருவதற்காக தலைமை ஆசிரியர் பகவதி பெருமாள், மாணவர்களை உத்வேகப்படுத்துவதற்காக ‘மைண்ட்செட் ஆஃப் சக்சஸ்’ என்ற புத்தகம் எழுதுகிறார். ஆனால் இந்த புத்தகம் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை தராமல் முதல் மூன்று ரேங் வாங்கு, இல்லையேல் செத்துப்போ என்கிறது.
இந்த நிலையில் இந்த புத்தகம் மர்மமான முறையில் எரிக்கப்படுகிறது. புத்தகத்தை படிக்கும் மாணவர்கள் தவறான பாதைக்கு திரும்புகிறார்கள், தற்கொலை செய்கிறார்கள். இதை பற்றி விசாரிப்பதற்காக வருகிறார் போலீஸ் அதிகாரி கே.எஸ்.ரவிகுமார், மாணவர்களை நல்வழிப்படுத்த வருகிறார்கள் ஆசிரியர்களான யோகி பாபுவும், பூமிகா சால்லாவும். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.
வெற்றி, தோல்வியை தாண்டியும் ஒரு வாழ்க்கை இருக்கிறது, என்ற அறிவுரையை மாணவர்களுக்கு கூறும் விதமாக படம் உருவாகி உள்ளது. ஆசிரியர் கனகவேல் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் யோகி பாபு, குணச்சித்திர நடிகராக கவனம் ஈர்த்திருக்கிறார். பூமிகா சாவ்லாவுக்கு பெரிய வேலை இல்லை
போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் கே.எஸ்.ரவிக்குமார், பள்ளியின் தலைமை ஆசிரியராக நடித்திருக்கும் பகவதி பெருமாள், உதவி தலைமை ஆசிரியராக நடித்திருக்கும் சாம்ஸ், மந்திரவாதி மஸ்தான் வேடத்தில் நடித்திருக்கும் நிழல்கள் ரவி ஆகியோர் அனுபவ நடிப்பை தந்திருக்கிறார்கள்.
இளையராஜாவின் இசை மற்றும் வரிகளில் பழைய வாசனை. ஆதித்யா கோவிந்தராஜ் படத்திற்கு தேவையானதை தந்திருக்கிறார்.
மூடநம்பிக்கையை வளர்க்கும் கதையை சொல்லியிருந்தாலும், மாணவர்களுக்கு சிறப்பான அறிவுரை வழங்கியிருக்கிறார் எழுதி இயக்கியிருக்கும் ஆர்.கே வித்யாதரன்