நான் சம்பாதித்த காசில் படம் தயாரித்துள்ளேன்: ஜோவிதா விஜயகுமார்

நடிகை வனிதா விஜயகுமார், தற்போது மிஸ்ஸஸ் & மிஸ்டர் என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்த படத்தில் நடன இயக்குநர் ராபர்ட் மாஸ்டர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா விஜயகுமார் தயாரித்துள்ளார்.

இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் ஜோவிகா விஜயகுமார் பேசியதாவது:
இந்த படத்தை கஷ்டப்பட்டு எடுத்திருக்கிறோம். இந்த படத்தில் நடித்தவர்கள், டெக்னீஷியன்கள் பல மைல் தூர் நடந்து நடித்தார்கள். கேரவன், நாற்காலி உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் நடித்திருக்கிறார்கள்.

இந்த படத்தை இவ்வளவு தூரம் கொண்டு வந்ததற்கு எங்களை சுற்றி இருப்பவர்கள்தான் காரணம். நாங்கள் தனியாக இல்லை என்பதை இப்போது உணர்ந்திருக்கிறோம்.
இந்தப் படம் உருவாக முக்கிய காரணம் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி எனக்கு உலகம் முழுக்க ரசிகர்களை உருவாக்கி கொடுத்தது. அவர்கள் குடும்பத்தில் ஒருவராக என்னை ஏற்றுக்கொண்டு வாழ்த்துகிறார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சி இல்லாமல் என்னால் இந்த இடத்திற்கு வந்திருக்க முடியாது. இந்த வயதிலும் நான் சொந்தமாக சம்பாதித்த காசைக் கொண்டுதான் இந்த படத்தை தயாரித்துள்ளேன். என்றார்.

Leave A Reply

Your email address will not be published.