நகரில் மர்மமான முறையில் ஒரே மாதிரியாக பலர் எரித்துக் கொல்லப்படுகிறார்கள். இதை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி விபத்தில் சிக்கி கோமா நிலைலைக்கு சென்றுவிட அந்த வழக்கு திறமையான போலீஸ் அதிகாரியான நவின் சந்திராவிடம் வருகிறது. அவர் எப்படி குற்றவாளிகளை கண்டுபிடிக்கிறார், குற்றவாளி யார்? என் கொலைகளை செய்கிறார் என்பது மீதி கதை.
நவீன் சந்திரா மிடுக்கான அதிகாரியாக மிரட்டியிருக்கிறார். ஆக்சன் காட்சிகளில் அதகளம் செய்யும் அவர், விசாரணை செய்யும் விதத்தில் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத் அலட்டிக் கொள்ளாமல் செய்திருக்கிறார். அவருடன் பணியாற்றும் அதிகாரியாக வரும் திலீபனும் நிறைவாக செய்திருக்கிறார்.
கொலைக்கான காரணமும், கொலையாளிகள் பற்றிய தகவல்களும் இதுவரை சொல்லப்படாத ஒன்று. நாயகி தனது மிகை நடிப்பை தவிர்த்திருக்கலாம். இமான் இசையும், ஒளிப்பதிவும் படத்தை உயர்த்திப் பிடிக்கிறது.