ஹிட் 3: ஆக்ஷன் அதிரடி விருந்து

ஒரு சைக்கோவுடன் ஒரு ஹீரோ மோதினாலே டெரராக இருக்கும். ஆனால் இந்த படத்தில் 100 சைக்கோவுடன் மோதுகிறார் ஹீரோ. அப்படியென்றால் படம் எப்படி இருக்கும் என்று பார்த்துக் கொள்ளுங்கள்.

நானி ஒரு சிறப்பு போலீஸ் அதிகாரி. ஐதராபாத்தில் நடக்கும் ஒரு கொலை விசாரணை தொடர்பாக காஷ்மீர் செல்லும் அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருக்கிறது. ஐதராபாத்தில் நடந்தது போல 13 கொலைகள் நடந்திருக்கிறது. எல்லாமே தலைகீழாக தொங்கவிட்டு கொலை செய்து, மனிதர்களின் உடல் பாங்கள் திருடப்பட்டுள்ளது.
டார்க் வெப் என்கிற இருண்ட வலைப்பின்னல்களுக்குப் பின்னால் ஒரு குற்றக் கும்பல் இருப்பது தெரிகிறது. அர்ஜுன் இந்த மர்மத்தை எப்படி அவிழ்கிறார் , அவர்களை எப்படி அழிக்கிறார் என்பதுதான் படம்.

ஆக்ரோஷமான நடிப்பு, உடல் மொழி, வசன உச்சரிப்பு என்று ஒரு பக்கா மாஸ் ஹீரோவாகப் படத்தின் தூணாக மாறியிருக்கிறார் நானி. ஆக்ஷன் காட்சிகளில் திரையில் கத்தி, துப்பாக்கி என்று விளையாடியிருக்கிறார். நாயகியாக வரும் ஸ்ரீநிதி ஷெட்டி, முதல் பாகத்தில் காதலையும், இரண்டாம் பாதியில் ஆக்ஷன் காட்சிகளிலும் ஆச்சர்யப்படுத்துகிறார்.
வில்லனாக வரும் பிரதீக் பப்பர் மிரட்டலான நடிப்பை தந்திருக்கிறார். இதுதவிர, ராவ் ரமேஷ், சமுத்திரக்கனி ஆகியோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையை செய்திருக்கிறார்கள். காஷ்மீரின் இயற்கை அழகையும், ஆக்ஷனின் தீவிரத்தையும் அழகாகப் படம்பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சானு ஜான் வர்கீஸ். மிக்கி ஜே. மேயரின் பின்னணி இசை ஆக்ஷன் காட்சிகளுக்கு உயிர் கொடுக்கிறது.

மொத்தத்தில் ஆக்ஷன் பிரியர்களுக்கு அதிரடியான விருந்து.

Leave A Reply

Your email address will not be published.