2015ம் ஆண்டு வெளியான ‘அன்டில் டான்’ பெரிய வெற்றி பெற்றது. வீடியோ கேமை அடிப்படையாகக் கொண்டது. அது ஒரு மரண விளையாட்டு. இந்த படத்தின் தொடர்ச்சி தற்போது அதே பெயரில் வந்துள்ளது.
நாயகி க்ளோவரும் (எல்லா ரூபின்) மற்றும் அவரது தோழிகளும், க்ளோவரின் சகோதரி மெலானி (மையா மிட்செல்) காணாமல் போன தொலைதூர பள்ளத்தாக்குக்குச் செல்கிறார்கள். அங்கு ஒரு பாழைந்த வீட்டுக்கு செல்லும் அவர்கள் ஒரு டைம் லூப்பில் சிக்கிக் கொள்கிறார்கள். அவர்கள் மீண்டும் மீண்டும் ஓரே கனவைக் காண்கிறார்கள். ஆனால் ஒவ்வொரு முறையும் வேறொரு புதுக் கொலைக்காரனை எதிர்காள்கிறார்கள். இச்சுழற்சியில் இருந்து தப்பிக்க அவர்கள் விடியும் வரை உயிர் பிழைத்தாக வேண்டும். அவர்கள் உயிர் பிழைத்தார்களா? என்பது மீதி கதை.
‘லைட்ஸ் அவுட்’, ‘அன்னாபெல் கிரியேஷன்’ போன்ற படங்களை இயக்கிய டேவிட் சாண்ட்பெர்க் இந்த படத்தை இயக்கியுள்ளார். சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா வெளியிட்டது. திகில் பிரியர்களுக்கு செம விருந்து