அஜீத்திற்கு இணையாக நின்று ஜெயித்த அர்ஜூன் தாஸ்

தனித்துவமான குரல், நடிப்பு என தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஆளுமையாக உருவாகி வருகிறார் அர்ஜுன் தாஸ். கொடூரமான வில்லனாக இருந்தாலும், மிக கொடூரமான சைக்கோவாக இருந்தாலும், மெல்லிய காதலாக இருந்தாலும் தன் முத்திரையை பதித்து வருகிறார்.

அஜீத் நடிப்பில் சமீபத்தில் வெளியான குட் பேக் அக்லி படத்தில் அஜீத்திற்கே சவால்விடும் வகையில் இரண்டு வேடங்களில் நடித்து அனைவரைது பாராட்டையும் பெற்றுள்ளார்.
இந்த நிலையில் குட் பேக் அக்லி படத்தின் வெற்றி விழா நடந்தது. இதில் அர்ஜுன் தாஸ் பேசியதாவது: எங்க இருந்து ஆரம்பிக்கிறதுனு தெரில. மீடியா நிற்குற இடத்துலதான் 11 வருஷத்துக்கு முன்னாடி நான் நின்னுட்டு இருப்பேன். இன்னைக்கு இந்த இடத்துல இருக்கேன். அஜித் சார் 2013ல இருந்து என் மேல நம்பிக்கை வச்சிருக்கார். அவர்தான் இந்த படத்துக்காக என்னை ஆதிக்கிட்ட சொல்லியிருக்கார்.

ஜாமி கதாபாத்திரத்தை நல்லபடியாக கையாண்டதற்கு பிரியாவுக்கு நன்றி சொல்லிக்கிறேன். நான் அஜித் சாரோட எல்லா படத்தோட போஸ்டரையும் நான் ஷேர் பண்ணுவேன். அப்படி ஒரு நாள் அஜீத் மானேஜர் எனக்கு கால் பண்ணி, `ஆதிக் மீட் பண்ணனும்னு சொன்னாரு போய் பாருங்கனு’ சொன்னாங்க. அப்படித்தான் இந்த வாய்ப்பு கிடைச்சது.” என்றார் அர்ஜுன் தாஸ்.

Leave A Reply

Your email address will not be published.