கேரளாவில் மிக மிக நல்ல முதல்வராக, நேர்மையான அரசியல்வாதியாக விளங்கிய பி.கே.ராம்தாஸ் (சச்சின் கெடேக்கர்) இறந்துவிட, மருமகன் பாபி (விவேக் ஓபராய்), ஆட்சியைக் கைப்பற்றி முதல்வராகிறார். அவர் போதை கும்பலுடன் தொர்பு வைத்துக் கொண்டு, தீமையான ஆட்சியைத் தர. ராமதாசின் வளர்ப்பு மகனான ஸ்டீபன் நெடும்பள்ளி (மோகன்லால்) உள்ளே வந்து விவேக் ஓபராயை வீழ்த்தி ராமதாசின் மகனான ஜதினை (டோவினோ தாமஸ்) முதல்வராக்கி விட்டு தனது டீமுடன் ரஷ்யா செல்வதுதான் முதல் பாகத்தின் கதை.
இரண்டாம் பாகத்தில் ஜதின் ராம்தாஸ் தன் அப்பாவைப் போல் இல்லாமல், ஊழல்வாதியாக இருப்பதுடன் தனது மதவாத சக்திகளுடன் இணைந்து நாட்டையே அழிக்க வழி அமைக்கிறார். நாடு ஆபத்தில் இருப்பதை அறிந்து கொள்ளும் மோகன்லால் மீண்டும் திரும்பி வந்து எப்படி நாட்டை காப்பாற்றுகிறார் என்பதுதான் இந்த பாகத்தின் கதை.
மதத்தை வைத்து ஆட்சி செய்யும் அரசியல்வாதிகளை வெளுத்துத் தீர்க்கும் மாஸ் என்டர்டெயினர் திரைக்கதை. அதை, அகண்ட அனமார்பிக் லென்ஸ் கொண்டு படம்பிடிக்கப்பட்ட காட்சியமைப்புகளின் வழியாக, ‘விஷுவல் கம் ஆக்ஷன் ட்ரீட்’டாக கொடுக்க முயன்று வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர் பிருத்விராஜ்.
லண்டன், எகிப்து, ஆப்பிரிக்கா, குஜராத், கேரளா என உலகத்தை சுற்றிக் காட்டுகிறது சுஜித் வாசுதேவின் ஒளிப்பதிவு, .
மோகன்லாலின் தளபதியாக வரும் பிருத்விராஜுக்கு இந்த பாகத்தில முன்னுரிமை இருக்கிறது. வலுவான பிளாஷ்பேக் அதை பழிதீர்க்கும் கிளைமாக்ஸ் என பிருத்விராஜ் கதைதான் படத்தை ஆரம்பித்து முடித்தும் வைக்கிறது.
இந்த பாகத்தில் மோகன்லால் அழித்து சின்ன வில்லனைத்தான் அவனை விட ஒரு பெரிய வில்லன் அறிமுகத்தோடு இந்த பாகம் முடிந்தது. மூன்றாம் பாகம் முழுக்க சர்வதேச அளவில் நடக்கும் என்று தெரிகிறது.