சினிமா தயாரிப்பில் இறங்கிய ஆருத்ரன் ரியல் எஸ்டேட் நிறுவனம்

ஆருத்ரன் பிக்சர்ஸ் சார்பில், எஸ். முருகன் தயாரித்துள்ள படம் “கொஞ்ச நாள் பொறு தலைவா” பிரபல இயக்குனர்களான சக்தி சிதம்பரம், உளவுத்துறை ரமேஷ் செல்வன் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய விக்னேஷ் பாண்டியன் இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகிறார்.
இப்படத்தில் நாயகன், நாயகியாக நிஷாந்த் ரூஷோ, காயத்ரிஷான் நடித்துள்ளனர்.

மேலும் பாலசரவணன், லொள்ளு சபா மாறன், கும்கி அஷ்வின், சூப்பர் குட் சுப்ரமணியம், மற்றும் ஏராளமானோர் நடித்துள்ளனர். மொட்டை ராஜேந்திரன் லவ்வர் பாயாக நகைச்சுவை கலந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் வில்லனாக ஜெயிலர் புகழ் ஹர்ஷத் நடித்துள்ளார். சிங்கம்புலி சிறப்புத் தோற்றத்தில் கதையின் திருப்புமுனை பாத்திரத்தில் நடித்துள்ளார். ஒளிப்பதிவு ஜோன்ஸ் ஆனந்த். பாடல்களுக்கு சமந்த் நாக் இசையமைத்திருக்கிறார்.
இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, நடைபெற்றது.

விழாவில் ஆருத்ரன் பிக்சர்ஸ் சார்பில் கலியமூர்த்தி பேசியதாவது: ஆரூத்ரன் நிறுவனம் 25 வருடங்களாக ரியல் எஸ்டேட் துறையில் மக்களுக்குச் சேவை செய்து வருகிறது, அதன் அடுத்த கட்டமாகத் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இப்படத்தைத் தயாரித்து உள்ளோம். எப்போதும் காமெடி படத்திற்குத் தனி வரவேற்பு உண்டு. மக்களுக்குப் பிடிக்கும் வகையில் அருமையான காமெடி படம் எடுத்துள்ள விக்னேஷுக்கு என் வாழ்த்துக்கள். என்றார்.

இயக்குநர் விக்னேஷ் பாண்டியன் பேசியதாவது:
என்னை முழுமையாக நம்பி இந்த வாய்ப்பைத் தந்த தயாரிப்பாளர் முருகன் சாருக்கு என் நன்றி. ஒரு நாள் கூட அவர் ஷீட்டிங்க் வந்ததே இல்லை, முழுமையாக என்னை நம்பி, நான் கேட்ட அனைத்தையும் தந்தார். இப்படத்தில் என்னுடன் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் என் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

வாழ்வில் எந்த பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது என்பதை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. நாயகன் நாயகியின் லிப்லாக் ரொமான்ஸுடன் காதல், நகைச்சுவை கலந்து அனைவரும் ரசிக்கும் வகையில், முழுமையான கமர்ஷியல் படமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. என்றார்.

Leave A Reply

Your email address will not be published.