திருநெல்வேலியிருந்து சென்னை வந்து ராயபுரம் பகுதியில் தண்ணீர் கேன் விற்பனையில் கொடிகட்டி பறக்கிறார் அண்ணாச்சி. அதே பகுதியில் தண்ணீர் கேன் வியாபாரத்துடன் போதை பொருளும் விற்பனை செய்கிறார் சரண்ராஜ் . இருவருக்கும் இடையில் இருக்கும் மோதலில் அப்பாவி இளைஞர்கள் எப்படி பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதுதான் படம். தண்ணீர் கேன் விற்பனைக்கு பின்னால் இருக்கும் மோசடிகள், வியாபார அரசியலையும் பேசுகிறது படம்.
நாயகனாக நடித்திருக்கும் துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ் மற்றும் நாயகியாக நடித்திருக்கும் கேப்ரில்லா கச்சிதமாக நடித்திருக்கிறார்கள். மற்றொரு நாயகன், நாயகியாக நடித்திருக்கும் பிரியதர்ஷன் மற்றும் ஹரிபிரியா ஜோடியும் காதல் மோதல் என தங்கள் பங்கை செய்திருக்கிறார்கள். எல்லோரிடமும் லிப்ட் கேட்டு பயணிக்கும் ஹரிபிரியா கேரக்டர் சினிமாவுக்கு புதுசு.
வில்லனாக நடித்திருக்கும் சங்கர்நாக் விஜயன் , ஜீவா ரவி, மகேஸ்வரி, அர்ஜுனா கீர்த்திவாசன், ஹைட் கார்த்தி, கெளசிக், கிரண்மயி என அனைவரும் குறைவில்லா நடிப்பை தந்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ஸ்ரீராம் சந்தோஷ், லைவ் லொக்கேஷன்களில் கடுமையாக உழைத்திருக்கிறார். இசையமைப்பாளர் போபோ சசியின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப வேலை செய்திருக்கிறது.
இரு தரப்புக்கும் இடையே ஏற்படும் மோதல், அதில் நடக்கும் சதி, அதை தொடர்ந்து ஏற்படும் உயிர் பலி என்று பரபரப்பான படத்தை தந்திருக்கிறார், இயக்குநர் ஜெயவேல் முருகன்.