கூரன்: ஒரு தா(நா)யின் போராட்டம்

வாகனத்தில் அடிபட்டு உடல் நசுங்கி கிடக்கும் எத்தனையோ நாய்களை நாம் பார்த்திருக்கிறோம். இதற்கு நிச்சயம் நாய் காரணமாக இருக்க முடியாது. காரணம் அதற்கு போக்குவரத்து விதிகள் தெரியாது. தெரிந்த ஒரு மனிதநாய்தான் இதற்கு காரணம். இப்படி உடல் நசுங்கி செத்த தனது குழந்தைக்கு நீதி கேட்டு ஒரு தாய் நாய் நீதிமன்றத்தின் படிக்கட்டு ஏறினால் எப்படி இருக்கும்? இந்த லாஜிக் இல்லாத அதீத கற்பனை கதை மூலம் மனசாட்சியை தட்டி எழுப்பும் படம் இது.

நிதின் வேமுபதி இதனை இயக்கியிருக்கிறார். சித்தார்த் விபின் இசையமைத்திருக்கிறார்.எஸ்.ஏ.சந்திரசேகரன், ஒய்.ஜி.மகேந்திரா, பாலாஜி சக்திவேல், சத்யன், ஜார்ஜ் மரியான், சரவண சுப்பையா, இந்திரஜா சங்கர் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.

வாய்பேச முடியாத நாய் எப்படி மக்கள் நல வழக்கறிஞர் எஸ்.ஏ.சந்திரசேகரின் உதவியுடன் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தருகிறது என்பதுதான் படத்தின் திரைக்கதை. லாஜிக் இல்லாவிட்டாலும் எடுத்து வைக்கப்படும் வாதங்கள் இன்றைக்கு தேவையான ஒன்று.

எஸ்.ஏ.சந்திரசேகர் 85 வயதிலும் தளராமல், தள்ளாடாமல் நடித்திருக்கிறார். நீதிபதி ஒய்.ஜி.மகேந்திரன், வழக்கறிஞர் பாலாஜி சக்திவேல் ஆகியோரும் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள். ‘நாய் என்றாலும் தாய் தாய் தானே. அதன் வலி நிஜம்தானே’ என்ற இரக்க உள்ளவர் என்றால் லாஜிக் பார்க்காமல் இந்த படத்தை பார்த்து ரசிக்கலாம்.

Leave A Reply

Your email address will not be published.