கடைசி தோட்டா: பரபர சஸ்பென்ஸ் திரில்லர்

அரசியல்வாதி ஒருவரின் வீட்டில் ஐடி ரெய்டு நடக்கப்போவதாக தகவல் கிடைக்க, வீட்டில் இருந்த கருப்பு பணம் அனைத்தையும் அவரது ரெசார்ட் ஒன்றில் மறைத்து வைத்து விடுகிறார். அந்த ரிசார்ட்சில் ஸ்ரீகுமார் தனது மனைவியுடன் ஹனிமூன் கொண்டாட தங்குகிறார். முன்னாளர் ராணுவ கர்னல் ராதாரவி ஓய்வெடுக தங்கி இருக்கிறார். கொட்டாச்சி தனது மகனின் மருத்துவத்திற்காக மனைவியுடன் வந்து அங்கு தங்குகிறார். வையாபுரி ஒரு பெண்ணோடு தனிமையில் இருப்பதற்காக அங்கு வந்து தங்குகிறார். ஓட்டேரி சிவா தலைமையிலான யூ டியூபர்கள் சிலரும் அங்கு தங்கி இருக்கிறார்கள். இந்த நிலையில் அந்த ரிசார்ட்சின் வெளிப்புறத்தில் ஒரு பெண் சுட்டுக் கொல்லப்படுகிறார். குற்றவாளி¬ò கண்டுபிடிக்க வருகிறார் போலீஸ் அதிகாரி வனிதா. அந்த பெண்ணை கொன்றது யார்? அந்த பெண்ணுக்கும், அரசியல்வாதி பதுக்கிய பணத்துக்கும் சம்பந்தம் உள்ளதா என்பதை திகில் அனுபவத்தோடு சொல்கிறது படம்.

கதையின் நாயகனாக ராதாரவி தனது அனுபவ நடிப்பால் படத்தை தாங்கி பிடிக்கிறார். பார்க்கும் பார்வையிலேயே ஆயிரம் மர்மங்கள் தன்னுள் ஒளிந்திருக்கிறது என்பதை ஒவ்வொரு காட்சியிலும் வெளிப்படுத்திக் கொண்டே செல்கிறார். ராதாரவியின் பிளாஷ்பேக்கில் ராதாரவிக்கும் அவரது மனைவிக்குமிடையேயான காதலை இருவரும் வெளிப்படுத்தும் பாடலில் இருவரின் நடிப்பும் உருக வைத்திருக்கிறது. முதியவர்களின் காதலையும், அன்பையும் அழகாக சொல்லும் காட்சிகள் கவனிக்க வைக்கிறது. வனிதா சிகரெட் புகைத்தபடி ஸ்டைலாக வந்து செல்கிறார். வையாபுரியின் டபுள் மீனிங் காமெடி சில நேரம் எரிச்சலூட்டுகிறது. ஓட்டேரி சிவா காமெடி ஓகே ரகம்.

வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷின் இசையில் ராதாரவியின் காதல் பாடல் முனுமுனுக்க வைத்தது. பின்னணி இசையும் பரபரப்பை ஏற்றுகிறது. மோகன் குமாரின் ஒளிப்பதிவு கதையை மிகவும் சுவாரஸ்யமாகக் கொண்டு செல்ல கைகொடுத்திருக்கிறது. ஒரு நல்ல கதையை மிகவும் அழகாக திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் இயக்குனர் நவீன்.

மொத்தத்தில், 8 தோட்டாக்கள் பாணியில் வந்திருக்கிறது, இந்த கடைசி தோட்டா

Leave A Reply

Your email address will not be published.