புதிய உலகத்திற்கு அழைத்துச் செல்லும் அகத்தியா

சினிமாவில் ஆர்ட் டைரடராக விரும்பும் ஜீவா புதுச்சேரியில் தனது முதல் பட வாய்ப்புக்காகக் கடன் வாங்கி ஒரு பங்களாவை ரெடி செய்கிறார். வேலை நடந்து கொண்டிருக்கும்போதே படப்பிடிப்பு நின்று போகிறது. பங்களாவை ஸ்கேரி ஹவுஸாக (பேய் மாளிகை) மாற்றி, காசு சம்பாதிக்கலாம் என்ற ஐடியாவை நாயகி ராஷி கண்ணா கொடுக்க அது வெற்றி பெறுகிறது. காசும் கொட்டுகிறது. இந்த நிலையில் அந்த பங்களாவில் ஒரு பழைய பிலிம் ரோல் ஒன்று கிடைக்கிறது. அதில் சித்தார்த்தன் (அர்ஜுன்) என்கிற சித்த மருத்துவர், 1940-ல் நடந்த கதையைச் சொல்லத் தொடங்குகிறார். அந்த கதையில் நடந்தது என்ன, நிகழ்காலத்தில் நடதீகும் அமானுஷ்யங்களுக்கும் அதற்கும் என்ன சம்பந்தம் என்பதைக் கலந்து சொல்வதே படத்தின் கதை.

மொத்த படத்தையும் தாங்கி பிடிக்கிறார் ஜீவா. கதைக்குத் தேவையான நடிப்பை மிகையில்லாமல் கொடுத்திருக்கிறார் . பிரெஞ்சு நாட்டிலிருந்து வரும் சித்த மருத்துவராக அர்ஜுன்தன் கம்பீர நடிப்பால் அதை ரசிக்க வைக்கிறார். ராஷி கண்ணா கலர்புல் கதாநாயகி.. மற்றொரு நாயகியாக நடித்துள்ள மாடில்டா, தன் கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்கிறார். வில்லனாக எட்வர்ட் சோனென்ப்ளிக், சர்வாதிகாரிக்கான தோரணையுடன் மிரட்டுகிறார். ஷாரா, ரெடின் கிங்ஸ்லி காமெடி ரசி’க வைக்கிறது. ராதாரவி, நிழல்கள் ரவி, யோகிபாபு, விடிவி கணேஷ், ரோகிணி, சார்லி தங்கள் பங்கை சரியாக செய்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தின் கதாநாயகன் நிச்சயமாகக் கலை இயக்குநர் பி.சண்முகம்தான். நிகழ்காலத்தில் வரும் பேய் பங்களா, கடந்த காலத்தில் வரும் பேலஸ் என இரண்டுமே ஒரே இடம்தான் என்றாலும் அதற்கிடையேயான வேறுபாட்டினை பிரமாண்டமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார். ஆங்காங்கே வரும் ஓவியங்களும் சிறப்பு. அவரது உழைப்பை அத்தனை சிரத்தையுடன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் தீபக் குமார் பதி. பீரியட் காலத்தின் ஒளியுணர்வு பேண்டஸியான பீல் கொடுக்கிறது. கிராபிக்ஸில் காட்சிகளும் மிரட்டுகிறது.

யுவன் சங்கர் ராஜா இசையில் ’என் இனிய பொன்நிலாவே’ என்கிற இளையராஜா பாடலின் ரீமிக்ஸ் வெர்ஷனும், பின்னணி இசையில் பீத்தோவனின் ’பர் எல்லிஸ்’ பிஜிஎம்மும் மனதில் நிற்கின்றன.

மொத்தத்தில் அகத்தியா மூலம் பார்வையாளர்களை இன்னொரு உலகத்திற்கு அழைத்துச் செல்கிறார் இயக்குனர் பா.விஜய்-.

Leave A Reply

Your email address will not be published.