ஓடிடிக்காக படம் எடுக்காதீர்கள்: ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்

ஸ்ரீ கணபதி பிலிம்ஸ் சார்பில் மை இண்டியா மாணிக்கம் தயாரிப்பில் உருவாகி உள்ள படம் ‘கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல். 1980களில் நெஞ்சமெல்லாம் நீயே, உதயகீதம், கீதாஞ்சலி, உயிரே உனக்காக உனக்காகவே வாழ்கிறேன், பாடு நிலாவே போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த கே.ரங்கராஜ் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது இந்த படத்தை இயக்கி உள்ளார். இதில் ஸ்ரீகாந்த், புஜிதா பொன்னாடா நடித்துள்ளனர். இரண்டாவது நாயகனாக பரதன் நடித்துள்ளார். இரண்டாவது நாயகியாக நிமி இமானுவேல் நடித்துள்ளார். மற்றும் பார்கவ் , நம்பிராஜன், கே.ஆர்.விஜயா, டெல்லி கணேஷ், சச்சு, நளினி, பருத்திவீரன் சுஜாதா, சிங்கம் புலி, ரமேஷ் கண்ணா, சாம்ஸ், அனுமோகன், வினோதினி, கவியரசன், மாஸ்டர் விஷ்னவா ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் மை இண்டியா மாணிக்கம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த படம் வருகிற மார்ச் 14ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில் இயக்குநர் ஆர் கே செல்வமணி பேசியதாவது:

இந்த விழாவிற்கு வந்த காரணம் ரங்கரஜான் சார் தான். 35 வருட பழக்கம் அவர் கண்டிப்பானவர் என்கிறார்கள், ஆனால் என்னிடம் எப்போதும் சிரித்து பேசுவார். மிக அமைதியான மனிதர். பாடல்கள் பார்த்தேன் கலர்புல்லாக மிக அழகாக எடுத்துள்ளார். கட்டுமானத்தை சரியாக செய்யாமல் சினிமா நல்லா இல்லை என சொல்லி வருகிறார்கள், பணம் போடுபவரை மதிக்க வேண்டும், அவரிடம் கண்ட்ரோல் இருக்க வேண்டும், ரங்கராஜ் சாரின் திட்டமிடல் மிகச்சரியாக இருக்கும், எடுக்க வேண்டியதை மிகக் கச்சிதமாக எடுத்து விடுவார். ரங்கராஜ் சார் போன்ற ஆளுமைக்கு ஆதரவு தர வேண்டியது நம் கடமை. எல்லோருக்கும் வாழ்க்கை தரும் படமாக இப்படம் இருக்கும்.

தமிழ் நாட்டில் தமிழர்களுக்காக படம் பண்ண முடியாமல், பான் இந்தியா படம் செய்தால் எப்படி சரியாகும், பான் இந்தியா என சொல்லி, இந்தி, தெலுங்கு ஆட்களைச் சேர்த்து அதை இங்கு திணித்து, படமாக தந்தால் படம் வெற்றி பெற்று விடுமா? எந்த மொழியை இங்கு திணித்தாலும், தமிழை அழிக்க முடியாது. நம் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் படம் எடுங்கள். ஒடிடிக்காக படம் எடுக்காதீர்கள், அதில் நமக்கு லாபம் இல்லை, இப்போது தமிழ் சினிமா நல்ல வளர்ச்சியை நோக்கிப் போகிறது. இந்தப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி.

Leave A Reply

Your email address will not be published.