மலேசிய திரைப்பட கலைஞர்கள் இணைந்து உருவாக்கி இருக்கும் படம். கதிர் ராவன் இயக்கி உள்ளார். அவரே நாயகனாக நடித்தும் உள்ளார். அவருடன் மாயா கிளாமி, நந்தகுமார், சாண்டினி கவுர், தமிழ்ச் செல்வன், கோகிலன் ராம் ஆகியோரும் நடித்துள்னர்.
தனது சொந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மித்ரன் (கதிர்) ஷ்ரிஷாவை (சாண்டினி கவுர்)தீவிரமாக காதலிக்கிறார். அவரிடம் பணியாற்றுகிறவர் நீரா (கிளாமி). அவர் விமான பைலட் அருணை (நந்தகுமார்) காதலிக்கிறார். ஷ்ரிஷாவுக்கும், அருணுக்கும் காதலை விட தங்கள் எதிர்காலம், சுயநலமே முக்கியமாக இருக்கிறது. இதனால் காதலர்கள் பிரிகிறார்கள். மித்ரனுக்கும், நீராவுக்கும் இடையில் காதல் மலர்கிறது. அது வெற்றி பெற்றதா என்பது கதை.
மலேசியத் தமிழர்களான நடிகர்கள் பொருத்தமாகப் பொருந்துகிறார்கள். கதிரின் மித்ரன் கதாபாத்திரம் சிறப்பாக உள்ளது. நந்தகுமாரும் சாந்தினியும் கொடுக்கப்பட்ட கேரக்டருக்கு நியாயம் செய்திருக்கிறார்கள். போதுமானவர்கள். ஆனால், தனது உணர்ச்சித் திறமையாலும், தனது பாத்திரத்தைப் பற்றிய உள்ளுணர்வு புரிதலாலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துபவர் நீராவாக நடித்துள்ள கிளாமி.
இன்றைய காதலை யதார்த்தமாக சொன்ன விதத்தில் கவனம் பெறுகிறது கண்நீரா.