பேபி அண்ட் பேபி: காமெடி கலாட்டாவில் சென்டிமெண்ட்

சென்னை விமான நிலையத்திலிருந்து கோவைக்குச் செல்வதற்காகக் கிளம்பும் சிவாவும் (ஜெய்), மதுரைக்குச் செல்வதற்காகத் தயாராகும் குணாவும் (யோகி பாபு) தங்களது மனைவி குழந்தையுடன் காத்திருக்கிறார்கள். விமான நிலையத்தில் நடக்கும் ஒரு குழப்பத்தில் சிவாவின் ஆண் குழந்தை குணாவிடமும், குணாவின் பெண்குழந்தை சிவாவிடமும் மாறியிருப்பது தெரிய வருகிறது.

சிவாவின் தந்தை (சத்யராஜ்) தனது பரம்பரை சொத்துக்காக ஆண் வாரிசையும், குணாவின் தந்தை ஜோதிட சாஸ்திரங்களின் அடிப்படையில் ஒரு பெண் வாரிசையும் எதிர்பார்த்திருக்கிறார்கள். இந்நிலையில் குழந்தைகள் மாறிப்போனதை எப்படிச் சமாளிக்கப் போகிறார்கள், இருவரின் குழந்தைகளும் பெற்றோரின் கைகளுக்கு எப்படி வந்து சேர்கிறது என்பதை நகைச்சுவையாகச் சொல்கிறது இந்த `பேபி அண்ட் பேபி’.

யுவராஜ் தயாரித்துள்ள இந்த படத்தில் ஜெய், யோகி பாபு, பிரக்யா நக்ரா, சத்யராஜ், மொட்ட ராஜேந்திரன், இளவரசு, நிழல்கள் ரவி, ஆனந்தராஜ், ரெடின் கிங்ஸ்லே, சிங்கம்புலி, ஸ்ரீராம், டைகர் தங்கதுரை, லொள்ளு சபா சேசு, ராமர் ஆகியோர் நடித்துள்ளனர். டி இமான் இந்த படத்திற்கு இசையமைக்க, சாரதி ஒளிப்பதிவும், ஆனந்த லிங்க குமார் எடிட்டிங் பணிகளையும் மேற்கொண்டுள்ளனர்.

ஜெய்க்கு இணையாக கேரக்டரில் யோகி பாபு நடித்துள்ளார். இருவரில் யார் ஹீரோ என்று தெரியாத அளவிற்கு இரண்டு பேருக்கும் சரிசமமாக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. சத்யராஜ் மற்றும் இளவரசு போன்ற சீனியர் நடிகர்கள் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள். தங்கதுரை, மொட்டை ராஜேந்திரன், ராமர் வரும் காட்சிகள் சிரிக்க வைக்கிறது. லாஜிக்கும் பார்க்காமல் குடும்பத்துடன் சென்று பார்த்து சிரித்து விட்டு வரலாம்.

Leave A Reply

Your email address will not be published.