‘2k லவ் ஸ்டோரி’: இளைஞர்களுக்கு பிடிக்கும்

வெண்ணிலா கபடி குழு, ஜீவா, பாண்டிய நாடு, பாயும் புலி என பல சிறந்த திரைப்படங்களை கொடுத்த சுசீந்திரன் இயக்கத்தில் தற்போது வெளிவந்துள்ள படம் ‘2k லவ் ஸ்டோரி’. படத்தின்

கதை இதுதான்.சிறு வயதில் இருந்தே நெருங்கிய நண்பர்களாக கார்த்திக் (ஜெகவீர்) – மோனிகா (மீனாட்சி) பழகி வருகிறார்கள். பள்ளி பருவத்தில் துவங்கி கல்லூரி, அதற்குப்பின் தொழில் என அனைத்திலும் ஒன்றாக பயணிக்கும் இவர்களை பார்க்கும், அனைவரும் இவர்கள் காதலர்கள் என்றே நி¬ùப்பார்கள். ஆனால், இவர்கள் எப்போதுமே நண்பர்களாகவே இருக்கிறார்கள்.
இந்த நிலையில் பவித்ரா என்கிற பெண்ணை கார்த்திக் காதலிக்க துவங்குகிறார். இருவரின் காதலுக்கும் உதவுகிறார் மோனிகா. இந்த சமயத்தில் விபத்தில் சிக்கி மரணமடைகிறார் பவித்ரா. தனது காதலியின் மரணத்தை தாங்காமல் வாடும் கார்த்திக்கை, துயரத்தில் இருந்து மீட்டெடுக்கிறார் மோனிகா. அதற்காக இன்னொரு பெண்ணை திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார். அந்த பெண்ணின் சகோதரனை தான் மணந்து கொள்ள நினைக்கிறார். அது நடந்ததா? என்பதுதான் தை.

ஒரு ஆணும், ஒரு பெண்ணும் ஒன்றாக சேர்ந்து பழகி வந்தாலே அது காதல்தான் என முடிவு செய்து விடும் இந்த சமூகத்திற்கு ஒரு ஆணும் பெண்ணும் இறுதிவரை நண்பர்களாகவே இருக்கலாம் என காட்டியுள்ளார் சுசீந்திரன். நண்பர்களாகவே இருவரும் எப்படி சமாளிக்கிறார்கள் என்பதையும் இப்படத்தில் அழகாக காட்டி உள்ளார்.

மீனாட்சி அனுபவ நடிப்பை தந்திருக்கிறார். அறிமுக நாயகன் ஜெகவீர் புதுமுகம் என்று தெரியாத அளவிற்கு நடித்திருக்கிறார். இரண்டாம் பாதியில் சிங்கம்புலி கொடுக்கும் அலப்பறை காமெடி சரவெடி. டி. இமானின் பாடல்கள் ரசிக்க வைக்கிறது.

2கே. இளைஞர்களை கவரும்

Leave A Reply

Your email address will not be published.