தினசரி: படல்ல… பாடம்

ஐ.டி.கம்பெனியில் பணிபுரியும் ஸ்ரீகாந்த்துக்கு பெற்றோர் பார்க்கிறார்கள். மணப்பெண் தன்னைவிட அதிக ஊதியம் பெறும் வேலையில் இருக்க வேண்டும் என்பது அவரவது நிபந்தனை. காரணம், பணம் மட்டுமே வாழ்க்கையின் அனைத்து தேவைகளையும் நிறைவு செய்யும் என்பது அவர் எண்ணம். சந்தர்ப்ப சூழ்நிலையால் அமெரிக்காவில் பிறந்து, தமிழ்க் கலாச் சாரத்தின் மீது பற்றுகொண்டு குடும்பத் தலைவியாக மட்டும் இருக்க நினைக்கும் பெண் சிந்தியாவை திருமணம் செய்து கொள்ள வேண்டியது வருகிறது. இந்த முரண் ஜோடி, வாழ்க்கையை அடுத்தகட்டம் நோக்கி எப்படி நகர்த்தினார்கள் என்பது கதை.

எல்லா காலத்துக்கும் அவசியமான கருத்தை முன்வைக்கும் திரைக்கதை, வீட்டுக்குள் நிகழும் காட்சிகள், வெளியிடங்களில் நிகழும் காட்சிகள் என மாறி மாறிக் கோர்த்துக் கொடுத்திருக்கிறார் இதன் இயக்குநர் ஜி.சங்கர். குறிப்பாக வசனங்களைக் கச்சிதமாக எழுதியிருக்கிறார்.

ஸ்ரீகாந்தின் பெண் பார்க்கும் படல தொடக்க காட்சிகள் ரசிக்கும்படியாக இருக்கின்றன. அதேபோல், பொய்களின் வழியாக மகனின் திருமணத்தை முடிக்கப் பெற்றோரும் சகோதரியும் ஆடும் ஆட்டமும் திருமணத்துக்குப் பின் குட்டு உடையும் தருணமும் நகைச்சுவை தோரணமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீகாந்த், நடிப்பில் நன்றாக உயர்ந்திருக்கிறார். அவருடைய பெற்றோராக எம்.எஸ்.பாஸ்கர், மீரா கிருஷ்ணன், அக்கா வாக வினோதினி, மனைவியாகச் சிந்தியா ஆகிய முதன்மை நடிகர்களின் தேர்வும் அவர்களின் நடிப்பும் கதைக்கு உயிர்ப்பைக் கொடுத் திருக்கிறது. ஆங்காங்கே வரும் இளையராஜா பாடல்கள் மனதை வருடுகின்றன.

பணத்தை நோக்கிய ஓட்ட மாக மட்டுமே தினசரி வாழ்க்கை அமைந்தால், அதில் எந்த மகிழ்ச்சியும் அமைதியும் இருக்காது என் பதை அழுத்தமான சம்பவங் களின் வழியாக, சிரிக்க வைத்து பாடம் சொல்கிறது ,படம்

Leave A Reply

Your email address will not be published.