அர்த்தமுள்ள படைப்புகளை தருவதே எங்கள் இலக்கு: அர்ச்சனா கல்பாத்தி

ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ்,கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரித்துள்ள படம் டிராகன். ஓ மை கடவுளே படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்கி உள்ளார். வருகிற 21ம் தேதி  திரையரங்குகளில் வெளியாகிறது.

பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், கே.எஸ்.ரவிக்குமார், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், விஜே சித்து, ஹர்ஷத் கான், மரியம் ஜார்ஜ், இந்துமதி மணிகண்டன், தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்ய லியோன் ஜேம்ஸ் இசையமைத்திருக்கிறார். அர்ச்சனா கல்பாத்தி கிரியேட்டிவ் புரொடியூசராக பணியாற்றியிருக்கிறார்.

விழாவில் அவர் பேசியதாவது: இது எங்கள் ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் 26வது திரைப்படம். ரொம்ப ஸ்பெஷலான படம். ஒவ்வொரு தயாரிப்பு நிறுவனத்திற்கும் பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படங்களை தொடர்ந்து கொடுக்க வேண்டும் என்பது இலக்காக இருக்கும். அதே தருணத்தில் அர்த்தமுள்ள படைப்புகளை வழங்க வேண்டும் என்ற கனவும் இருக்கும்.  வெற்றியும், கனவும் இணைந்து ஒரு படத்தை கொடுக்க வேண்டும் என்றால் அது கடினம்.

ஆனால் அது போன்றதொரு கமர்ஷியல் அம்சங்களும், கனவுகளும் இணைந்த படம்தான் ‘டிராகன்’ படத்தை முதலில் பார்த்துவிட்டு இயக்குநருக்கு வாழ்த்து தெரிவித்தேன். இந்தப் படம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ரசிகர்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். 
ஒரு திரைப்படம் தயாராவது எளிதல்ல, அதன் பின்னணியில் மிகப்பெரிய குழுவினரின் கடின உழைப்பு இருக்கும். இந்தத் தருணத்தில் அந்த குழுவில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தத் படத்தில் கே.எஸ்.ரவிக்குமார், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் என மூன்று இயக்குநர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த மூவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருக்கும் நடிகை கயாடு லோஹரை வரவேற்கிறேன். எங்கள் நிறுவனம் எமி ஜாக்சன் போன்ற ஏராளமான நடிகைகளை அறிமுகப்படுத்தி இருக்கிறது. நீங்களும் உங்களுடைய கடின உழைப்பால் நிறைய வெற்றிகளை பெற வேண்டும் என வாழ்த்துகிறேன். என்றார்.

Leave A Reply

Your email address will not be published.