இதயம் முரளி எனக்குள் இருக்கிறார்: அதர்வா நெகிழ்ச்சி

டாவ்ன் பிக்சர்ஸ் சார்பில் 4 வது படைப்பாக, தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில், அதர்வா முரளி நடிக்கும், “இதயம் முரளி” படத்தின் டைட்டில் மற்றும் டீசர் வெளியீட்டு விழா, தனியார் கல்லூரியில் நடைபெற்றது.

மறைந்த நடிகர் முரளியின் மறக்கமுடியாத பாத்திரம் இதயம் முரளி, அவரது மகன் அதர்வா நடிக்கும் படத்திற்கு, இதயம் முரளி தலைப்பிடப்பட்டு அறிவிக்கப்பட்டது. விழாவில் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் பேசியதாவது:

தயாரிப்பபை விட இயக்கம் தான் ஈஸி, சின்ன வயதிலிருந்து எனக்கு இயக்குநராகும் ஐடியா இருந்தது. ரசிகர்களை உற்சாகப்படுத்த வேண்டுமென உருவாக்கிய திரைக்கதை இது. இப்படம் நம் காதல், நட்பை ஞாபகப்படுத்தும். இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட அனைவருக்கும் நன்றி. ஒரு அழகான காதல் படமாக இருக்கும் . என்றார்.

நடிகர் அதர்வா பேசியதாவது:
ஒன் சைட் லவ் எப்போதும் வாழ்வில் மறக்க முடியாத அனுபவம், என் அப்பாவின் கொண்டாடப்பட்ட டைட்டில் இதயம் முரளி, என்னுள்ளும் ஒரு இதயம் முரளி இருக்கிறான், எல்லோருக்குள்ளும் ஒரு இதயம் முரளி இருக்கிறான், அதைக் கொண்டாடும் வகையில் மிக அழகான காதல் படமாக இருக்கும். இயக்குநர் ஆகாஷுக்கு நன்றி.
இதயம் முரளி என்பது மிகவும் உணர்வுப்பூர்வமான விசயம், ஆகாஷ் மிகப்பெரிய தயாரிப்பாளர், அவரை ஒரு இயக்குநராகத் தான் தெரியும். இந்தக்கதையை 2017ல் சொன்னார், அப்போது அது நடக்கவில்லை, பின்பு தயாரிப்பாளராக மாறிவிட்டார், அதன் பிறகு இப்போது இந்தப்படம் செய்யலாம் என்றார். மிக மகிழ்ச்சியாக இருந்தது. கண்டிப்பாக இப்படம் ஒரு நல்ல படமாக இருக்கும் . என்றார்.

Leave A Reply

Your email address will not be published.