ராமாயணா: தி லெஜண்ட் ஆஃப் பிரின்ஸ் ராமா

பல ஆயிரம் கோடி பட்ஜெட்டில் ராமாயணம் தொடர்பாக பல படங்கள் தயாரிக் கொண்டிருக்கும் நேரத்தில் பிரமிப்பூட்டும் கார்டூன் படமாக வந்திருக்கிறது இந்தப் படம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்த்து ரசிக்கும் வண்ணம் எளிய முறையில் தந்திருப்பது இதன் சிறப்பு. 2டி தொழில்நுட்ப கார்ட்டூன் என்பது இன்னொரு சிறப்பு.

கீக் பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் அர்ஜூன் அகர்வால், சிபி கார்த்திக், ஜப்பானை சேர்ந்த தொமாட்சு கொசனோ ஆகியோர் நேர்த்தியாக தயாரித்து தந்திருக்கிறார்கள். இந்தியில் தயாராகி இருந்தாலும் தமிழில் நேர்த்தியாக டப் செய்திருக்கிறார்கள். ராமருக்கு செந்தில்குமாரும், சீதாவிற்கு மகேஸ்வரியும், ராவணனுக்கு பிரவீன் குமாரும், லட்சுமணனுக்கு தியாகராஜனும், ஹனுமனுக்கு லோகேசும் குரல் கொடுத்திருக்கிறார்கள்.

ராமாயண கதாபாத்திரங்கள் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. காட்சிகளோடு ஒன்றும் விதமாக படமாக்கி இருக்கிறார். பாடல்களையும் தமிழில் தந்திருந்தால் இன்றும் சிற்பபாக இருந்திருக்கும். குடும்பத்தோடு சென்று பார்க்கத் தகுந்த படம்.

Leave A Reply

Your email address will not be published.