வீரதீரமிக்க மதகஜராஜா என்கிற விஷால் கேபிள் டிவி நடத்துகிறார். இவரது நண்பர்களான நிதின் சத்யா வில்லன் சோனு சூட்டால் பணத்தை இயக்கிறார், சடகோபன் ரமேஷ் துணை கலெக்டர் வேலை இழந்து சிறைக்கு செல்கிறார். அரசியல் பலம், பணபலம் நிறைந்த வில்லனாக வரும் சோனு சூட்டை விஷால் எப்படி எதிர்த்து நின்று நண்பர்களின் இழப்பை சரி செய்கிறார் என்பதுதான் படத்தின் கதை.
படத்தின் ஆக்ஷன் ஹீரோ விஷால் அதிரடி சண்டை காட்சியிலும், சவால் விடுவதிலும் கவனம் ஈர்க்கிறார். ஹீரோயின்கள் அஞ்சலி, வரலட்சுமியுடன் ரொமான்சும் செய்கிறார். காமெடி ஹீரோ சந்தானம். அவரது காமெடியுடன்தான் படமே தொடங்குகிறது. அவருக்கென்று தனி கதையும் இருக்கிறது. சந்தானம் மார்ச்சுவரி வேன் உரிமையாளராக இருப்பதால் அவரை வெறுக்கும் மனைவி சந்தானத்திடம் டைவர்ஸ் கேட்கிறார். ஆனால் மனைவியை விட்டு பிரிய மனம் இல்லாமல் இருக்கிறார். இந்த பிரச்சினையையும் விஷால் தீர்த்து வைக்கிறார்.
விஷாலின் ஆக்ஷன், சந்தானத்தின் காமெடிக்கு நிகராக இருக்கிறது வரட்சுமியு மற்றும் அஞ்சலியின் கவர்ச்சி. படம் முழுக்க இருவரும் தொப்புள் தெரிய ஆடை அணிந்து வருகிறார்கள். விஷாலின் மீது வலிந்து விழுகிறார்கள். பாடல்களில் கெட்ட ஆட்டம் போட்டிருக்கிறார்கள்.
காமெடியின் ஹைலைட் மனோபாலா. ‘மகளிர் மட்டும்’ படத்தில் நாகேஷ் பிணமாக நடித்து சிரிக்க வைத்தது போன்று இதில் மனோபால செய்திருக்கிறார். அந்த காட்சிகளின்போது தியேட்டரில் சிரிப்பலை பொங்குகிறது.இப்போது ஹீரோவாகிவிட்ட சந்தானத்தை பழைய காமெடி சந்தானமாக பார்க்க முடிகிறது. இப்படியே அவர் நடிக்கலாமே என்றும் தோன்றுகிறது. அதேபோல மனோபாலா, மணிவண்ணனின் இழப்பையும், படம் பதிவு செய்கிறது.
வழக்கமான சுந்தர்.சியின் காமெடி பொங்கல்தான் இது. லாஜிக் பார்க்கால் படத்தை பார்த்தால் இரண்டரை மணி நேரம் இரண்டரை நிமிடமாக கடந்து விடும்.
மதகஜகாமெடிராஜா.