மலேசியாவைச் சேர்ந்த கதிரவென் எழுதி இயக்கி ஹீரோவாக நடித்துள்ள படம், ‘கண்நீரா’. சாந்தினி கவுர், மாயா கிளம்மி, நந்தகுமார் என்கேஆர் நடித்துள்ளனர். ஏ.கணேஷ் நாயர் ஒளிப்பதிவு செய்ய, ஹரிமாறன் இசை அமைத்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் கதிரெவன் கூறியதாவது: மலேசியாவில் தான் முழுமையாக இப்படத்தை, கஷ்டப்பட்டு உருவாக்கி உள்ளோம். எங்களுக்கு முழு ஆதரவைத் தந்த உத்ரா ப்ரொடக்ஷன்ஸ் உத்ரா சாருக்கு என் நன்றிகள். என் மனைவிதான் இப்படத்திற்குக் கதை எழுதி உள்ளார். மலேசியாவிலிருந்தபோது, இந்த கதையை என்னிடம் சொன்னார் மிக அருமையாக இருந்தது. இந்தப் படத்தை உருவாக்கலாம் என்று ஆரம்பித்தபோது, என் மனைவி கர்ப்பமானார், ஆனால் அப்போது கூட கண்நீரா படம் தான், என் முதல் குழந்தை என்று சொன்னார். அப்போதே இந்த படம் பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கை வந்து விட்டது.
என் மனைவி தான் இப்படத்தை இயக்கியிருக்க வேண்டும் ஆனால் சில காரணங்களால் அவர் என்னையே இயக்கச் சொன்னார். ஒரு மிகச்சிறப்பான படமாக இப்படத்தை உருவாக்கியுள்ளோம். அனைவரும் ரசிக்கும் வண்ணத்தில் இப்படம் உருவாகியுள்ளது.
இப்படத்தை என் மனைவி இயக்க வேண்டியது, அவரிடம் சொன்ன போது, இரண்டாம் பாகத்திற்குக் கதை இருப்பதாகச் சொன்னார், அந்தக்கதையும் மிக அருமையாக இருந்தது. அந்தப்படத்தை மனைவி தான் இயக்கியுள்ளார். அந்தப்படத்தையும் முடித்து விட்டோம். நீங்கள் தான் முழு ஆதரவைத் தர வேண்டும்.