நன்றி மறவாமல் பத்திரிகையாளர்களுக்கு திருமண விருந்து அளித்த சாக்ஷி அகர்வால்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகை சாக்ஷி அகர்வால் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர். சென்னையில் ஐடி துறையில் பணியாற்றி வந்த இவர், சினிமாவின் மீது கொண்ட ஆர்வத்தால் மாடலிங் துறையில் கால் பதித்தார். அட்லீ இயக்குனராக அறிமுகமான ‘ராஜா ராணி’ திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்தார். இதைத்தொடர்ந்து கன்னடம், மலையாளம், போன்ற மொழிகளிலும் அடுத்தடுத்து நடிக்க துவங்கினார். கடந்த 2019 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார்.

அஜித் நடித்த விஸ்வாசம், குட்டி ஸ்டோரி, டெடி, சிண்ட்ரெல்லா, அரண்மனை 3, 4 ஸ்டோரி , நான் கடவுள் இல்லை, பகீரா போன்ற படங்களில் நடித்தார்.அந்த வரிசையில் தற்போது இவரின் கைவசம் கெஸ்ட்: சாப்டர் 2 மற்றும் தி நைட் ஆகிய படங்கள் உள்ளன.

இந்த நிலையில் கடந்த 4ம் தேதி தன்னுடைய சிறு வயது நண்பர், நவ்நீத் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்தை தொடர்ந்து தனது வளர்ச்சிக்கு காரணமாக இருந்த பத்திரிகையாளர்களுக்கு ராஜஸ்தான் ஸ்டைலில் விருந்து கொடுத்து மகிழ்வித்தார். பத்திரிகையாளர்களும் அவரை வாழ்த்தி திருமணத்திற்கு பிறகும் நடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.