வேலம்மாள் பள்ளியில் வீதி விருது விழா: 5 ஆயிரம் கலைஞர்கள் பங்கேற்பு

வேலம்மாள் நெக்சஸ் மற்றும் மாற்று ஊடக மையம் இணைந்து 12வது வீதி விருதுவிழா நிகழ்வை கடந்த 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் நடத்தியது. சென்னை, முகப்பேர் கிழக்கில் உள்ள வேலம்மாள் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் சுமார் 5,000க்கும் மேற்பட்ட நாட்டுப்புறக் கலைஞர்கள் வருகைதந்து தங்கள் கலைத்திறன்களை மிகுந்த ஆர்வத்துடன் வெளிப்படுத்தினர்.

விழாவில் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் கர்னல். பேராசிரியர் என். எஸ். சந்தோஷ் குமார், வேலம்மாள் நெக்சஸ் குழுமத்தின் தாளாளர் எம். வீ. எம். வேல்மோகன், மாற்று ஊடக மையத்தின் நிறுவனர் பேராசிரியர் ஆர். காளீஷ்வரன், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவின் முக்கிய பகுதியாக, தமிழ்நாட்டின் பாரம்பரிய நாட்டுப்புறக் கலை வடிவங்களான தெருக்கூத்து, கரகாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், பறை இசை, ஒயிலாட்டம் போன்ற பல கலை நிகழ்வுகள் நடந்தது.

விழாவில் கடந்த ஆண்டு சிறந்த படங்களை இயக்கிய திரைப்பட இயக்குனர்களுக்கு வீதி விருது வழங்கப்பட்டது. விருது பெற்றவர்கள் விபரம் வருமாறு:

வெற்றிமாறன் – விடுதலை பாகம் 2
மாரி செல்வராஜ் – வாழை
பா. ரஞ்சித்- — தங்கலான்
சீனு ராமசாமி – கோழிப்பண்ணை செல்லத்துரை
பிரேம்குமார்- மெய்யழகன்
பி. எஸ். வினோத் ராஜ் –& கொட்டுக்காளி
டி. ஜே. ஞானவேல்- – வேட்டையன்
தமிழரசன் பச்சமுத்து – லப்பர் பந்து
போஸ் வெங்கட் – சார்
பரி இளவழகன் – ஜமா
திவ்யாபாரதி – ஜில்லு
மைக்கேல் கே. ராஜா -போகுமிடம் வெகு தூரமில்லை
எழில் பெரியவேடே- பராரி
நந்தா பெரியசாமி – திரு.மாணிக்கம்
இரா. சரவணன் – நந்தன்

இரண்டாம் நாள் நிகழ்வில் 10 ஆயிரம் நாட்டுப்புற கலைஞர்களின் கலைப்பேரணி நடந்தது. இரண்டு நாள் விழாவை லட்சக்கணக்கான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.