கன்னட சினிமாவின் முன்னணி நடிகரான கிச்சா சுதீப் நடித்து அடுத்து வெளிவர உள்ள படம் ‘MAX’ . தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் பான் இந்தியா படமாக வருகிற 27ம் தேதி வெளிவருகிறது. இதன் தமிழ் பதிப்பு டிரைய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கிச்சா சுதீப், தமிழ் பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, தமிழ் திரைப்பட இயக்குனர் சங்க தலைவர் ஆர்.வி. உடையகுமார், இயக்குனர்கள் மிஸ்கின், ராஜ்குமார் பெரியசாமி, தேசிங் பெரியசாமி உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
மேலும், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை மற்றும் இந்திய திரைப்பட சம்மேளனத்தின் தலைவர் ரவி கோட்டாரக்காரா, முன்னாள் தலைவர் காட்ராகட்ட பிரசாத், நடிகர் இளவரசு, நடன அமைப்பாளர் ஷோபி உள்ளிட்டோர் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
கலைப்புலி எஸ். தாணு நிகழ்ச்சியில் பேசும்போது, படக்குழுவின் கடின உழைப்பை பாராட்டி, ‘MAX’ படம் அதன் தனிப்பட்ட கதை கூறும் முறையாலும், இசையாலும் ரசிகர்களைக் கவரும் என நம்பிக்கை தெரிவித்தார்.
கிச்சா சுதீப் பேசும்போது அறிமுக இயக்குனர் விஜய் கார்த்திகேயாவின் கதையை புகழ்ந்து, ‘காக்க காக்க’ படத்தின் கன்னட உரிமைகளை வாங்கும்போது தாணு அவர்களிடம் நேர்முகமாக சந்தித்த அனுபவத்தை பகிர்ந்து, ஒரு காசும் வாங்காமல் அவருக்கு உரிமை வழங்கிய அவரது நற்குணத்தை நினைவுகூர்ந்தார். மேலும், தாணு அவர்கள் கன்னடத் திரைப்படத்துறையிலும் தனது முத்திரையை பதிக்க வேண்டும் என்பதற்கான விருப்பத்தையும் தெரிவித்தார்.