எஸ்.ஜே.சூர்யாவுக்கு டாக்டர் பட்டம்: வேல்ஸ் பல்லைகழகம் வழங்கியது

‘குஷி’ படத்தின் மூலம் அறிமுகமாகி வாலி, நியூ, அன்பே ஆருயிரே, இசை உள்ளிட்ட படங்களை இயக்கியவர் எஸ்.ஜே.சூர்யா. குஷி, வாலி தவிர அவர் இயக்கிய படங்களில் அவரே நடித்தார். தற்போது பிசியான நடிகராகி விட்டார்.இந்த நிலையில் சென்னையில் உள்ள வேல்ஸ் பல்கலை கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி உள்ளது. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா முன்னிலையில் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 15 வது பட்டமளிப்பு இன்று நடைபெற்றது. இதில் எஸ்.ஜெ.சூர்யா, பிரபல பேட்மிண்டன் பயிற்சியாளர் திரு.புல்லேலா கோபிசந்த் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

இவர்களுடன் சுமார் 4 ஆயிரத்து 500 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. பட்டங்களை வழங்கி சபாநாயகர் ஓம் பிர்லா சிறப்புரையாற்றினார்.
விழாவில் பல்கலைகழகத்தின் வேந்தர் டாக்டர் ஐசரி கே கணேஷ், நிறுவனர் வேந்தர் டாக்டர் ஏ ஜோதி முருகன் இணை வேந்தர்கள் டாக்டர் ஆர்த்தி கணேஷ், டாக்டர் ஃப்ரீத்தா கணேஷ், துணைத் தலைவர், துணை வேந்தர்கள் டாக்டர். ஸ்ரீமன் நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வேல்ஸ் பல்கலை கழகம் 2008 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கத்தின் விபிஸிஞி ஆல் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமாக விளங்குகிறது. சென்னையில் 100 ஏக்கர் பரப்பளவில் மூன்று வளாகங்களைக் கொண்ட தமிழ்நாட்டின் பல்துறைப் பல்கலைக்கழகம் என்ற தனிச்சிறப்பைப் பெற்றுள்ளது.

மருத்துவம், நர்சிங், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், வேளாண்மை, கடல்சார் ஆய்வுகள், சட்டம், கலை மற்றும் அறிவியல் போன்ற பல்வேறு துறைகளில் ஹிநி முதல் றிலீ.ஞி வரையிலான திட்டங்களை வழங்குகிறது . இந்த ஆண்டு பல்கலைக்கழகத்தின் மேலும் ஒரு சாதனையாக மத்திய அரசின் பல்கலைக்கழக மானியக் குழுவால் ழிகிகிசி கி++ தரச்சான்று வழங்கப்பட்டு உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.