மாயன் என்பது காலத்தை கணி’கும் சக்தி. மாயன் நாட்காட்டியின்படிதான் உலகம் இயங்குகிறது என்பதை நம்புகிறவர்கள் உண்டு.. மாயன் நாள்காட்டியின்படி உலகம் அழியப் போகிறது என்று அவ்வப்போது பயமுறுத்தல்களும் வரும். இது தொடர்பாக நிறைய ஹாலிவுட்டில் படங்கள் வெளியாகி உள்ளது. தற்போது இதே மாயன் நாள்காட்டியின் உலக அழிவு குறித்த தவவலை மையமாகக் கொண்டு வெளி வந்திருக்கும் தமிழ்ப் படம் ‘மாயன்’.
சென்னையில் சாப்ட்வேர் கம்பெனி ஒன்றில் ‘டீம் லீட’ராகப் பணிபுரியும் வினோத் மோகனுக்கு ‘இன்னும் 13 நாள்களில் உலகம் அழியப் போகிறது, நீ வாழ நினைத்த தருணங்களை வாழ்ந்துகொள்’ என்று ஒரு மெயில் வருகிறது. அதை முதலில் நம்பாத ஆதி, தன்னைச் சுற்றி நடக்கும் சில நிகழ்வுகளால் அதை நம்புகிறான். அதன் விளைவாக, தனது காதல், திருமணம், சொந்த வீடு ஆகிய கனவு களை அவசர அவசரமாக நிறைவேற்றுகிறான். ஒரு கட்டத்தை உலகத்தை அழிக்கப்போகும் அந்த மாயனே தான்தான் என்பதை உணர்கிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை.
புராணம், மாயன் நாள்காட்டி, தற்காலம் மூன்றையும் இணைத்துப் ஒரு பேண்டசி த்ரில்லர் படம் தந்திரு’கிறார், ஜெ.ராஜேஷ் கண்ணா. மாயன் வினோத் மோகன், கோப்பெருந்தேவியாக வரும் பிந்து மாதவி, வீரசூரனாக வரும் சாய் தீனா, மன்னராக வரும் ஜான் விஜய் உள்ளிட்ட கதாபாத்திரங்களின் வேகங்கள் படத்தையும் வேகமாக கொண்டு செல்கிறது. கலிகாலம் முற்றிவிட்டது, உலகம் அழியப் போகிறது என்கிற நம்பிக்கையை கிராஃபிக்ஸ், வி.எஃப்.எக்ஸ் காட்சிகள் வழியாக சொல்கிறது படம்.
கிராபி’ஸ் காட்சிகளின் தரம் உயர்த்தப்பட்டடிருந்தால் படம் இன்னும் பேசப்பட்டிருக்கும். என்றாலும் இரண்டரை மணி நேர டைம் பாசுக்கு உத்தரவாதம் தருகிறான் மாயன்