வாழ்க்கையில் பல்வேறு சாதனைகள் படைக்க வேண்டும் என்பதை தான் ஒவ்வொருவரும் லட்சியமாக கொண்டு பயணிப்பார்கள். ஆனால், சாதனைப் படைத்தவர்களையும், உழைப்பால் உயர்ந்தவர்களையும் அங்கீகரித்து மக்களின் வெளிச்சத்தில் அவர்களை மிளிரச் செய்ய வேண்டும், என்பதையே லட்சியமாக கொண்டு பயணிப்பவர் ஜான் அமலன். திரைத்துறை மட்டும் இன்றி தொழில், விளையாட்டு, அரசியல், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதித்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கு விருது வழங்கி கெளரவிக்க வேண்டும் என்று திட்டமிட்டு ‘இந்தியன் மீடியா ஒர்க்ஸ்’ என்ற நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனம் மூலம் 2 வருடங்களுக்கு ஒருமுறை ‘இந்தியன் விருதுகள்’ வழங்கும் விழாவை நடத்தி வருகிறார்.
இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி வரும் டிசம்பர் 21,22 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்கள் நிகழ்வாக, சென்னை, சேத்துபட்டில் உள்ள லேடி ஆண்டாள் அரங்கில் நடைபெறுகிறது. இதில், சினிமாத்துறையில் சிறந்த நடிகர், நடிகை, இயக்குநர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் உள்ளிட்ட 60 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படுகிறது. மேலும், அரசியல், தொழில், விளையாட்டு, மருத்துவம், கல்வி, ராணுவம், காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 30 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகிறது.
மேலும், இறந்தும் மக்கள் மனதில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் நடிகரும், அரசியல் தலைவருமான விஜயகாந்த் நினைவாக ‘கேப்டன் விஜயகாந்த்’ என்ற பெயரில் சினிமாத்துறையில் சாதித்தவர்களுக்கு விருது வழங்கப்பட உள்ளது. விருதுகள் வழங்குவது மட்டும் இன்றி இந்திய ராணுவத்தில் பணியாற்றி உயிர் நீத்த ராணுவ வீரர்களின் குடும்பங்கள் மற்றும் ஏழை எளிய சிறுவர்களுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்த நிகழ்வுகளுடன் ‘மிஸ்டர் அண்ட் மிசஸ்’ தமிழ்நாடு அழகு போட்டியும் நடக்கிறது.
தற்போது இந்தியன் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் க்லயோனா அண்ட் லியோ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி திரைப்படங்களையும் தயாரிக்க இருக்கிறது.