‘பணி’ படத்திற்காக 2 வருடங்கள் நடிக்கவில்லை: ஜோஜு ஜார்ஜ்
பிரபல மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் முதன் முறையாக இயக்கி நடித்திருக்கும் திரைப்படம் ‘பணி’. திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள இப்படம் மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில், தற்போது தமிழில் நாளை வெளியாகிறது. இப்படத்தை தமிழகமெங்கும் ஶ்ரீ கோகுலம் மூவிஸ் வெளியிடுகிறது. படத்தின் வெளியீட்டை ஒட்டி, தமிழில் பத்திரிக்கையாளர்களுக்கு சிறப்புத் திரையிடல் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் ஜோஜு ஜார்ஜ் பேசியதாவது:
வந்தவரை வாழ வைக்கும் தமிழகம் என நம்பி வந்திருக்கிறேன். எனக்கு இங்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஊக்குவித்து இங்கு ரிலீஸ் செய்ய சொன்னதால் தான் ரிலீஸ் செய்கிறோம். உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன். இந்தப்படத்திற்காக 2 வருடம் நடிப்பிலிருந்து பிரேக் எடுத்து, இந்தப்படம் செய்தேன். இப்படத்தில் பணிபுரிந்த அனைவரும் எனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்தார்கள். இங்கு மணிரத்னம் சார், கமல் சார், விக்ரம் சார் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் எல்லோரும் மிகப்பெரிய ஆதரவைத் தந்தார்கள். சந்தோஷ் நாராயணன் எனக்காக ஸ்பெஷல் பாடல் தந்தார். அனைவருக்கும் என் நன்றிகள். உங்கள் ஆதரவைத் தாருங்கள்.இப்படத்தை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் . என்றார்.
இந்த படத்தை அப்பு பத்து பாப்பு புரொடக்ஷன் சார்பில் தயாரிப்பாளர்கள் ரியாஸ் ஆடம், சிஜோ வடக்கன் தயாரித்துள்ளனர். ஜோஜு ஜார்ஜ், சாகர் சூர்யா, ஜுனைஸ் வி.பி., பாபி குரியன், அபிநயா, அபயா ஹிரண்மயி, சீமா, சாந்தினி ஸ்ரீதரன், பிரசாந்த் அலெலீசாண்டர், சுஜித் சங்கர், ரினோஷ் ஜார்ஜ் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தில் விஷ்ணு விஜய், சாம் சி. எஸ் இசையமைத்துள்ளனர்.