‘பராரி’ படத்திற்காக அழகை குறைத்து நடித்த புதுமுகம்
இயக்குநர், தயாரிப்பாளர் ராஜூமுருகனின் உதவியாளர் எழில் பெரடி இயக்கி உள்ள படம் ‘பராரி’. இதில் புதுமுங்கள் ஹரி, சங்கீதா, புகழ் மகேந்திரன் நடித்துள்ளனர். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார். வருகிற 22ம் தேதி படம் வெளிவருகிறது.
படத்தின் அறிமுக விழாவில் இயக்குனர் எழில் பெரியவெடி பேசும்போது “இந்த கதையை ‘ஜிப்ஸி’ படத்தில் பணியாற்றியபோதே எழுதி முடித்துவிட்டேன். நான் கதை சொன்ன எல்லோருக்குமே கதை பிடித்திருந்தது. ஆனால், ஏதோ ஒரு இடத்தில் தயக்கம் இருந்தது. பின்புதான் ராஜூமுருகன் சார் ஹரியை உள்ளே கொண்டு வந்து இரண்டு பேரும் சேர்ந்து படத்தைத் தயாரித்தார்கள்.
அவர் இந்தப் படத்திற்காக எடை குறைத்தார். திருவண்ணாமலை மக்களையும் உள்ளே கொண்டு வந்து இந்தப் படத்தில் நடிக்க வைத்தோம். கதைக்காக அனைத்து நடிகர்களுக்கும் ரிகர்சல் கொடுத்தோம். ‘ஜோக்கர்’ படத்தில் இருந்தே ஷான் ரோல்டன் எனக்கு நல்ல பழக்கம். அவரும் பாடலாசிரியர் உமாதேவியும் இல்லை என்றால் இந்தப் படம் இல்லை.
இந்த படத்திற்காக சுமார் 2 ஆயிரம் பெண்கள் வரை வரவழைத்து ஆடிசன் செய்தோம் 2001வது பெண்ணாக கடைசியாகத்தான் சங்கீதா வந்தார். ஆனால் அவர் நல்ல அழகான அவர் படத்தில் மேக்கப் போடாமல் நடித்தார். அவர் நடித்துள்ள கிளைமாக்ஸ் காட்சியில் வேறு எந்த நடிகையாலும் நடிக்க முடியாது.
இந்த பூமிக்கு நாம் எல்லோருமே விருந்தினர்கள் தான். எதுவுமே நமக்கு சொந்தம் கிடையாது. நாம் பூமியை விட்டு போகும்போது எதாவது ஒரு நல்ல விஷயத்தை சொல்ல வேண்டும் என்பதுதான் ‘பராரி’ படத்தின் நோக்கம். இது எங்களின் கூட்டு முயற்சி. நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும்.” என்றார்.
இந்த படம் திருவண்ணாமலை பகுதியில் இருந்து பெங்களூருக்கு வேலைக்கு செல்லும் கூலித் தொழிலாளர்கள் பற்றியும், அவர்களுக்குள் இருக்கும் ஜாதி மோதல், காதல் இவற்றின் பின்னணியில் உருவாட் உள்ளது.
==============