டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன நிகர்நிலை பல்கலைகழத்தின் 38வது பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் 4 ஆயிரம் மாணவ மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது. விழாவுக்கு பல்கலைகழக நிறுவன வேந்தர் ஏ.சி.சண்முகம் தலைமை தாங்கினார். பல்கலைகழக சேர்மன் ஏ.சி.எஸ்.அருண்குமார் முன்னிலை வகித்தார். செகரட்டரி ஏ.ரவிகுமார், துணை வேந்தர் எஸ்.கீதாலட்சுமி முன்னிலை வகித்தனர்.
மத்திய அமைச்சர் எல்.முருகன் மாணவ மாணவிகளுக்கு பட்டம் வழங்கி சிறப்புரையாற்றினார். இந்த விழாவில் விஞ்ஞானியும், இந்திய ராணுவ ஆராய்ச்சி நிறுவன தலைவருமான ஜி.ஏ.சீனிவாச மூர்த்தி, நடிகர் அர்ஜுன், இயக்குனர் பி.வாசு ஆகியோருக்கு அவர்களது சேவையை பாராட்டி கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
டாக்டர் பட்டம் குறித்து அர்ஜுன் கூறும் போது “மிகப்பெரிய சினிமா குடும்பத்தில் பிறந்து வளர்ந்த போதும் ஆரம்ப காலங்களில் சினிமாவில் வளர்வதற்கு மிகவும் கஷ்டப்பட்டேன். பல படங்களில் புறக்கணிக்கப்பட்டேன் பல படங்கள் தோல்வி அடைந்து பிளாகப் ஹீரோ என்ற பெயரும் பெற்றேன் அதன் பிறகு கடுமையாக போராடி இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன்.
இது போன்ற பெரிய கல்வி நிறுவனம் எனக்கு டாக்டர் பட்டம் அளித்திருப்பது மிகவும் மகிழ்ச்சி ஏற்படுத்துகிறது. இந்த பட்டத்திற்கு நான் தகுதியானவனா என்பது எனக்கு தெரியாது ஆனால் இனிமேல் தகுதி ஆக்கிக் கொள்வேன்”. என்றார்
==============