சாய்பல்லவியின் அடுத்த படம் ‘தண்டேல்’. தெலுங்கில் தயாராகும் இந்த படத்தில் நாக சைதன்யா ஜோடியாக சாய்பல்லவி நடிக்கிறார். சந்து மொணடேடி இயக்குகிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, ஷாம்தத் ஒளிப்பதிவைக் கையாள்கிறார். கீதா ஆர்ட்ஸ் சார்பில் பன்னி வாஸ், அல்லு அரவிந்த் தயாரித்துள்ளனர். இப்படத்தின் தயாரிப்பு பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் வெளியீட்டு தேதியை தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதன்படி இந்த படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாக சைதன்யா, சாய் பல்லவி இணைந்து நடித்த ‘லவ் ஸ்டோரி’க்குப் பிறகு, மீண்டும் அவர்கள் இந்த படத்தில் இணைந்திருப்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள டி மச்சிலேசம் என்ற மீனவ கிராமத்தில் நடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இந்த படம் உருவாகி உள்ளது.