வேட்டையனுக்கு உதவியவர்களுக்கு பிரியாணி விருந்து
ரஜினி நடித்த வேட்டையன் படம் கடந்த 10ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அமிதாப் பச்சன், ராணா, பகத் பாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். அனிருத் இசை அமைத்திருந்தார். த.செ. ஞானவேல் இயக்கத்தில் ரிலீசான இப்படம் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. இதுவரை 300 கோடி வசூலித்திருப்பதாகவும், 500 கோடிக்கு மேல் வசூலிக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் படத்தில் பணியாற்றியவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் படத்தின் இயக்குனர் த.செ.ஞானவேல் பேசியதாவது: ‘ஜெயிலர்’ மாபெரும் வெற்றியை தொடர்ந்து கதைக்கு முக்கியத்துவம் அளிக்கும் படத்தில் நடிக்க துணிச்சல் வேண்டும். அந்த தைரியத்துடன் நடித்ததால் தான் அவர் சூப்பர் ஸ்டார்.
‘வேட்டையன்’ குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியானது மிகவும் மகிழ்ச்சி. ரசிகர்களை தாண்டி குழந்தைகளுடன் குடும்பத்தோடு தியேட்டர் வந்து படத்தை பார்க்குறாங்க. இது நானே எதிர்பார்க்காத ஒன்று. இந்தியாவின் மிகப்பெரிய நட்சத்திரங்கள் இதில் நடித்துள்ளார்கள். அதற்கு காரணம் லைகா நிறுவனம்தான். ஒரு இயக்குனராக எனக்கு முழு சுதந்திரம் தந்தார்கள். நான் கேட்டதை எல்லாம் கொடுத்தார்கள் அதனால்தான் படம் சிறப்பாக வந்தது. என்றார். விழாவில் அனைவருக்கும் பிரியாணி விருந்து வழங்கப்பட்டது.