‘அலிபாபா’ என்ற படத்தின் மூலம் நாயகனானார் கிருஷ்ணா. அதன் பிறகு கற்றது களவு, கழுகு, வல்லினம், யாமிருக்க பயமேன், வன்மம், வானவராயன் வல்லவராயன், பண்டிகை, யாக்கை, யட்சன் படங்களில் நடித்தார். கடைசியாக கவுதம் மேனன் இயக்கிய ‘ஜோஸ்வா இமைபோல் காக்க’ படத்தில் வில்லனாக நடித்தார். தற்போது அவர் நடிக்கும் 23வது படம் தொடங்கப்பட்டுள்ளது. நாகார்ஜூன் ஒளிப்பதிவு செய்கிறார், சாம் சி.எஸ் இசை அமைக்கிறார். இந்த படத்தை டான் கிரியேசன்ஸ் சார்பில் எல்.கணேஷ் தயாரிக்கிறார். அறிமுக இயக்குனர் அப்பாத்துரை பாரதிராஜா இயக்குகிறார். படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை.
இந்த படத்தில் கிருஷ்ணா ஜோடியாக மலையாள நடிகை வர்ஷா விஸ்வநாத் நடிக்கிறார். மலையாளம், தெலுங்கு படத்தில் நடித்துள்ள இவர் இந்த படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார்.
“கிராமத்துக் கதையாக உருவாகவிருக்கும் இந்தப்படம் திருச்சி மற்றும் மதுரை புறநகர் பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெறுகிறது. சஸ்பென்ஸ் ,மற்றும் ஆக்ஷன் நிறைந்த கமர்சியல் படமாக அனைவரும் ரசிக்கும் படமாக இருக்கும்” என்கிறார் படத்தின் இயக்குனர் அப்பாத்துரை பாரதிராஜா.
=============