அருண் விசுவல் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் வி.எம்.ஆர்.ரமேஷ், ஆர்.அருண் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘ஸ்வீட்டி நாட்டி கிரேஸி’. அறிமுக இயக்குநர் ஜி.ராஜசேகர் இயக்கி உள்ளார். தெலுங்கு நடிகர் திரிகுண் மற்றும் ஸ்ரீ ஜீத்தா கோஷ், இனியா, சுந்தரா டிராவல்ஸ் ராதா, ரவி மரியா, சிங்கம்புலி உள்பட பலர் நடித்துள்ளனர். அருணகிரி இசை அமைத்துள்ளார், விஜய ஸ்ரீ ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகிறது.
படத்தின் அறிமுக விழா நடந்தது. இதில் நடிகை இனியா பேசியதாவது: இந்தப்படம் எனக்கு ஸ்பெஷல், நான் நடித்த மூன்று படங்கள் இந்த வாரம் வெளிவந்துள்ளது. என் வாழ்க்கையில் தொடர்ந்து நல்ல விசயங்கள் நடப்பது மகிழ்ச்சி. இப்படத்தில் நந்தினி எனும் பாத்திரத்தில் நடித்துள்ளேன், மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளோம். ஸ்வீட்டி நாட்டி கிரேஸி யார் யார் என்பதுதான் படத்தின் கதை. என்றார்.
நாயகன் த்ரிகுண் பேசியதாவது: எனக்கு ஊர் கோயம்புத்தூர்தான், சென்னையில் விஷ்காம் படிக்க முயற்சித்தேன் சீட் கிடைக்கவில்லை. அதனால் ஜர்னலிசம் படிச்சேன், பிரகாஷ் ராஜ் கண்ணில் பட்டு, ‘இனிது இனிது’ படத்தில் நடித்தேன். காலேஜ் படிக்கும் போதே ஹீரோ ஆகிவிட்டேன். சமீபத்தில் மிஷ்கின் இசையமைத்த ‘டெவில்’ படத்தில் நடித்தது மகிழ்ச்சி. நான் தெலுங்கில் பத்து படங்களுக்கு மேல் நடித்திருந்தாலும், இங்கு பார்ப்பவர்கள் என்ன படம் செய்துள்ளாய் எனக் கேட்கும் போது, வருத்தமாக இருக்கும், அதனால் தமிழில் படம் செய்ய வேண்டும் என நினைத்தேன்.
அந்த நேரத்தில் தான் இந்த படத்தின் வாய்ப்பு வந்தது. இப்போதைய கால கட்டத்தில் ஒன்று அழ வைக்க வேண்டும், இல்லை சிரிக்க வைக்க வேண்டும், இப்போது நான் சீரியஸ் படங்கள் தான் செய்து வருகிறேன், அதனால் கண்டிப்பாக இந்தப்படம் செய்யலாம் என சொன்னேன். இப்படத்திற்காக ஈசிஆரில் பாடல் ஷீட் செய்தோம் அதே இடத்தில் ஜூனியர் ஆர்டிஸ்டாக நடித்துள்ளேன், இப்போது ஹீரோவாக நடித்தது மகிழ்ச்சி. இப்படம் கண்டிப்பாகப் பேசப்படும் படமாக இருக்கும். எங்கள் படத்தில் மூன்று கதாநாயகிகள், அனுபவம் வாய்ந்தவர்கள் என்னுடன் இணைந்து நடித்ததற்கு நன்றி. இந்தப்படம் எல்லோருக்கும் கண்டிப்பாகப் பிடிக்கும் ஜாலியான படமாக இருக்கும். என்றார்.