நாயகன் சதா நடாரும், நாயகி மோனிகா செலேனாவும் கருத்தொருமித்த இளம் கணவன் மனைவி. மகிழ்ச்சியாக போய் கொண்டிருக்கும் இவர்கள் வாழ்க்கையில் குறுக்கே வருகிறது கன என்கிற வில்லன். சதாவுக்கு திடீர் திடீரென கெட்ட கனவுகள் வர, அவைகள் அடுத்தடுத்து நிஜத்திலும் நடக்கிறது. ஒரு நாள் தன் மனைவியை கொலை செய்வது போன்றே கனவு காண்கிறார். அந்த கனவு நனவானதா? அதை சதா நாடார் தடுத்தாரா என்பதுதான் படத்தின் கதை.
இந்த படதை நிஜத்திலும் கணவன், மனைவியான சாதா நாடாரும், மோனிகா செலேனாவும், இணைந்து தயாரித்து, நடித்து, இயக்கி இருக்கிறார்கள். தமிழ் சினிமாவுக்க இது புதியது. கனவில் காணும் காட்சியைக் கண்டு அலறுவது, மனைவியை கொன்று விடுவோமே என்று தவிப்பது என நிறைவான நடிப்பை தந்திருக்கிறார் சதா நாடார்.
மோனிகா செலேனா ஒரு நடிகைக்கான திறமை மற்றும் அழகோடு இருக்கிறார். இந்தப் படத்தில் நிறைமாத கர்ப்பிணியாக வலியுடன் போராடுவது உருக வைக்கிறது. கணவின் நிலை கண்டு தவிப்பது, என நடிப்பில் கவனம் ஈர்க்கிறார். பாடல் காட்சிகளில் கிளாமராக தோன்றுகிறார்.
எம்.எஸ்.மனோகுமாரின் ஒளிப்பதிவு, ஈ.ஜே.ஜான்சனின் இசை படத்திற்கு உதவி இருக்கிறது. படத்தின் கதை புதிதில்லை என்றாலும், காட்சிகளையாவது புதிதாக தந்திருக்கிலாம். என்றாலும் கணவன், மனைவியின் ரொமான்ஸ் இளம் ரசிகர்களை கவரும். கடைசி நிமிடத்தில் வரும் அந் கிளைமாக்ஸ் அப்ளாஸ் அள்ளுகிறது.