கதையின் நாயகன் விஜய் சத்யா – ஷெரின் தம்பதியினருக்கு ஒரு குழந்தை மூவரும் மகிழ்ச்சியான குடும்பம், மகிழ்ச்சியான வாழ்க்கை. வாழ்ந்துவருகின்றனர். ஒரு நாள் இரவு மகளின் பிறந்த நாளை கொண்டாட மூவரும் வெளியில் சென்றுவிட்டு, காரில் திரும்பிக் கொண்டு இருக்கிறார்கள். போதை இளைஞர்கள் நான்கு பேர் காரை வழி மறிக்கிறார்கள். ஷெரீனிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சிக்கிறார்கள். அவர்களை விஜய் சத்யா தடுத்து சண்டை இடுகிறார். அந்த நான்கு இளைஞர்களில் ஒருவர் மரணடைகிறார். அவர் அமைச்சர் ஏ.வெங்கடேசின் மகன்.
இறந்து போன அமைச்சரின் மகனுக்கு மணிமண்டபம் கட்டும் பணி விஜய் சத்யாவுக்கே வருகிறது. அமைச்சருக்கு ஒரு கட்டத்தில் உண்மை தெரிந்த உடன் என்ன நடக்கிறது என்பது கதை. விஜய் சத்யா ஆக்ஷனில் மிரட்டி இருக்கிறார். ஆஜானுபாகுவான சிக்ஸ் பேக் உடலமைப்ப அதற்கு உதவுகிறது. மனைவி, குழந்தையிடம் பாசம் காட்டும் காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். குடும்பத் தலைவியாக – ஒரு குழந்தைக்குத் தாயாக வருகிறார் ஷெரின். கணவன், குழந்தை மீது பாசம் காட்டுவது, போதை இளைஞர்களிடம் சிக்கித் தவிப்பது என சிறப்பாக நடித்து உள்ளார். ஒரு பாடலில் கவர்ச்சியும் காட்டி உள்ளார்.
வில்லனாக இயக்குநர் வெங்கடேஷ், அதிரடியான அரசியல்வாதியாக நேர்த்தியாக நடித்துள்ளார். அவரது மனைவியாக வரும் வனிதாவும் நடிப்பில் குறைவைக்கவில்லை. இமான் அண்ணாச்சி, விஜய் டிவி பாலா உள்ளிட்டோர் கொடுத்த கதாபாத்திரத்தை செய்துள்ளனர். அம்ரீஷ் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன.
பின்னணி இசை இரைச்சல். மனோவி.நாராயணாவின ஒளிப்பதிவு பளிச் ரகம். சின்ன சின்ன குறைகள் இருந்தாலும் இரண்டரை மணி நேரம் ரசிக்க வைக்கிற படம்.