பணத்தை விட சினிமா முக்கியம்: ‘சேவகர்’ தயாரிப்பாளர் பேச்சு

சில்வர் மூவிஸ் இன்டர்நேஷனல் சார்பில் ராஜன் ஜோசப் தாமஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘சேவகர்’.இப்படத்தை சந்தோஷ் கோபிநாத் இயக்கியுள்ளார். பிரஜின் நாயகனாகவும், ஷானா நாயகியாகவும் நடித்துள்ளனர். இப்படத்தை திரையரங்குகளில் ஆக்சன் ரியாக்ஷன் விநியோக நிறுவனத்தின் சார்பில் ஜெனிஷ் வெளியிடுகிறார். இப்படத்தின் ட்ரெய்லர் மட்டும் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது.

விழாவில் தயாரிப்பாளர் ராஜன் ஜோசப் தாமஸ் பேசியதாவது: எனக்கு சினிமா மீது மிகவும் ஆர்வம் ஈடுபாடு உண்டு. அதனால் கேரளாவில் இருந்து இங்கே வந்து சினிமாவில் நுழைய வேண்டும் என்று பல நாட்கள் அலைந்தேன். ஒரு துணை நடிகராகக் கூட எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதற்குப் பிறகு நன்றாகப் படித்து அமெரிக்கா சென்றேன். அங்கே தபால் துறையில் 28ஆண்டுகள் வேலை பார்த்தேன்.

இப்போது ஓய்வு பெற்றுவிட்டு அதே சினிமா ஆர்வத்துடன் தான் இந்தியா திரும்பினேன். அந்த ஆர்வத்தை அணைய விடாமல் வைத்திருந்தேன். மலையாளத்தில் சில படங்கள் தயாரித்தேன், நடித்தேன். இப்போது இந்த படத்தை தயாரித்துள்ளேன்.

சினிமா என்பது என் கனவு.எனக்குப் பணத்தைவிட நல்ல படம் எடுப்பது தான் முக்கியம். இந்தப் படத்தின் மூலம் சம்பாதித்தால் வேறு பெரிய நல்ல படம் செய்வேன். எனவே மக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும். என்றார்.

விழாவில் கே.பாக்யராஜ், மோகன்ஜி, கே.ராஜன், போஸ் வெங்கட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Leave A Reply

Your email address will not be published.