தமிழ் சினிமாவில் தற்போது குழந்தை நட்சத்திரங்கள் அதிகமாக இல்லை. ஒரு காலத்தில் ஸ்ரீதேவி, குட்டிபத்மினி போன்றவர்கள் நட்சத்திர குழந்தை நட்சத்திரங்களாக இருந்தார்கள். பின்னாளில் ஷாலினி, ஷாமிலி இருந்தார்கள். அவர்களுக்கு பிறகு குழந்தை நட்சத்திரங்கள் இல்லை. ஒரு சிலர் வருவார்கள், வந்த வேகத்தில் சென்று விடுவார்கள்.
இப்படியான சூழ்நிலையில் லக்ஷனா ரிஷி என்ற குழந்தை நட்சத்திரத்தை அவரது தந்தை எஸ்.வி.ரிஷி ‘எங்க அப்பா’ என்ற இசை ஆல்பத்தில் நடிக்க வைத்து அதற்கொரு வெளியீட்டு விழா நடத்தி அறிமுகப்படுத்தி உள்ளார். இந்த ஆல்பத்தை இயக்குனர் கே.பாக்யராஜ் வெளியிட இயக்குனர் பேரரசு பெற்றுக் கொண்டார்.
பின்னர் இருவரும் பேசும்போது “அழகு பதுமையாக இருக்கும் லக்ஷனா ரிஷி நட்சத்திர குழந்தை நட்சத்திரமாகவும், பிற்காலத்தில் ஹீரோயினாகவும் ஜொலிப்பார். அதற்கான அழகும், திறமையும் அவரிடம் உள்ளது” என்று பாராட்டி பேசினார்கள்.
இந்த விழாவில் தயாரிப்பாளர் அனீஷா சதீஷ், இயக்குனர் எஸ்.வி.ரிஷி, இசையமைப்பாளர் சந்தோஷ் சாய், நடிகர்கள் பயில்வான் ரங்கநாதன், விஜய் கணேஷ், பாவா லட்சுமணன், பெஞ்சமின், மீசை ராஜேந்திரன், சௌந்தர்ராஜன், ராஜாதிராஜா, காதல் சுகுமார், காதல் சரவணன், அழகேஷ், தெனாலி, கராத்தே ராஜா, சின்ராசு, பிஆர்ஓ கோவிந்தராஜ், நடிகைகள் சுமதி, ஸ்ரீதேவி ஆகியோர் கலந்து கொண்டனர்.
!