பிடிஜி யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட் சார்பில் பாபி ரவிச்சந்திரன் தயாரிக்கும் இரண்டாவது படம் ‘சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்’. இத்திரைப்படத்தில் வைபவ், அதுல்யா ரவி,மணிகண்டா ராஜேஷ், ஆனந்தராஜ், இளவரசு, ஜான் விஜய், சுனில் ரெட்டி, ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன்,பிபின்,ஹுசைனி உள்பட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். விக்ரம் ராஜேஷ்வர் இயக்கி உள்ளார், இமான் இசை அமைத்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து வெளியிட்டுக்கு தயாராகியுள்ளது.
இந்த நிலையில் படத்தின் டீசர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் பாபி பாலச்சந்திரன் பேசியதாவது: எங்களது நிறுவனத்தின் வியூகத் தலைமையாளராக இருக்கும் மனோஜ் பெனோ மற்றும் எங்களது குழுவினர், சமீபத்தில் வெளியாகி வெற்றியடைந்த,எங்களது முதல் திரைப்படமான ‘டிமான்ட்டி காலனி-மிமி இயக்குனர் அஜய் ஞானமுத்து மற்றும் எங்களது அடுத்த திரைப்படம் ஆன ‘ரெட்ட தல’ திரைப்படத்தின் ஹீரோ அருண் விஜய் இருவருக்கும் மிக்க நன்றி. சிறப்பான நடிகர்களை ஒன்றிணைத்து, தரமான நகைச்சுவை கலந்த பொழுதுபோக்கு திரைப்படத்தை அளிக்க வேண்டும் என்ற நோக்கில் ‘சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்’ திரைப்படத்தை எடுத்துள்ளோம். அது உங்களை மகிழ்விக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். என்றார்.
நடிகர் வைபவ் பேசும்பொழுது,” தயாரிப்பாளர் பாபி பாலச்சந்திரன் மற்றும் மனோஜ் பெனோ இருவருக்கும் மிக்க நன்றி. இங்கு வந்து வாழ்த்திய சகோதரர் அருண் விஜய், இமான், இயக்குனர்கள் மற்றும் சக நடிகர்களுக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படம் ரசிகர்களுக்கு நகைச்சுவை விருந்தாக இருக்கும்” என்றார்.
விழாவில் ‘ரெட்ட தல’ பட ஹீரோ அருண் விஜய் ‘டிமாண்டி காலனி’ இயக்குனர் அஜய் ஞானமுத்து ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.