கூட்டுக்குடும்ப வாழ்கையை சொல்லும் ‘வீராயி மக்கள்’

ஏ வைட் ஸ்கிரீன் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் என். சுரேஷ் நந்தா தயாரிக்க, இயக்குநர் நாகராஜ் கருப்பையா இயக்கத்தில் கிராமிய மக்களின் யதார்த்த வாழ்வியலை மையப்படுத்தி உருவாகியிருக்கும் திரைப்படம்  ‘வீராயி மக்கள்’. வேல ராமமூர்த்தி, மறைந்த நடிகர் மாரிமுத்து, தீபா ஷங்கர், சுரேஷ் நந்தா, நந்தனா, ரமா, செந்தி குமாரி, பாண்டி அக்கா, ஜெரால்ட்  மில்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.எம். சீனிவாசன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு தீபன் சக்கரவர்த்தி இசையமைத்திருக்கிறார். விரைவில் திரைக்குவரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, நடைபெற்றது.

விழாவில் நடிகர் வேல ராமமூர்த்தி பேசியதாவது,

இந்தப் படத்தில் நான் மகன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். உண்மையில் சொல்ல போனால் நான் நடிக்க வில்லை, எனக்கு அந்த கதாபாத்திரம் இயல்பாகவே பொருந்தி விட்டது. இந்தப் படத்தில் நடிக்கும்போது என் வீட்டில் இருப்பது போல ஒரு உணர்வு இருந்தது. என் அம்மாவைப் போல இந்த வீராயி என் கண் முன்னே தோன்றினார். படத்தில் நடித்த அத்தனை நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். அதற்கு முக்கிய காரணம் இயக்குநர் நாகராஜ். இப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்தால் மட்டுமே இப்படி ஒரு படத்தை உருவாக்க முடியும், ஒவ்வொரு காட்சியையும் ரசித்து உருவாக்கியுள்ளார். அவருக்கு எனது வாழ்த்துகள், நிச்சயம் இந்தப் படத்திற்கு பிறகு அவருக்கு நீண்ட நல்ல எதிர்காலம் இருக்கிறது.   மேலும் தயாரிப்பாளர் கண்டிப்பாக இந்தப் படத்தின் மூலம் பெரிய வெற்றியை ஈட்டுவார், இது போன்ற படங்களை மேலும் தயாரிக்கும் முயற்சியில் அவர் ஈடுபடுவார் என நம்புகிறேன். படக்குழு அனைவருக்கும் எனது வாழ்த்துகள் நன்றி.

இயக்குநர் நாகராஜ் பேசியதாவது:

இந்த படம் முழுக்க நான் வாழ்ந்து பார்த்த அன்பு, கோபம், வாழ்க்கை, வாழ்வியல். முதல் படம் முடித்த பிறகு 7 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படத்தை நான் எழுதி முடித்ததும், நான் முதன் முதலாக தேர்வு செய்தது வேல ராமமூர்த்தி அய்யா தான், அவர்தான் வேண்டுமென்று நினைத்தேன், அவரும் ஒப்புக் கொண்டார். இந்தப்படத்தில் அவரது நடிப்பு மிகவும் வித்தியாசமாக இருக்கும், கண்டிப்பாக உங்களுக்கு புது அனுபவமாக இருக்கும்.  ஒவ்வொரு கதாபாத்திரமும் மண் மனம் மாறாத கதாபாத்திரமாக இருக்க வேண்டுமென்று நினைத்தேன். அதே போல அனைத்தும் அமைந்தது விட்டது.

இந்தச் சூழலில் நான் மாரிமுத்து சாரை நினைத்துப் பார்க்கிறேன், அவரது முயற்சி இந்த படத்திற்கு பெரிய உதவியாக இருந்தது. கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் நடக்கும் சந்தோசத்தை போல, வேறு எந்த வீட்டிலும் இருக்காது.  எத்தனை முரண்கள் இருந்தாலும் ஒருவர் ஒருவரை அரவணைத்து கொள்வது ஒரு அழகு.  இப்படி பட்ட அழகான காட்சிகள் பல இந்தப் படத்தில் இருக்கிறது. கண்டிப்பாக உங்களுக்கு இந்தப் படம் பிடிக்கும். இந்தப் படம் நிச்சயமாக உங்கள் ஆள் மனதை தொடும் என்று நம்புகிறேன்.   என்றார்.

 

Leave A Reply

Your email address will not be published.