மீண்டும் நடிக்க தொடங்கிய பாலா

தென்னிந்திய சினிமாவின் முன்னணி இயக்குனரான  சிறுத்தை சிவாவின் தம்பி பாலா.

தமிழில் அன்பு, காதல் கிசுகிசு, கலிங்கா, வீரம் , தம்பி, அண்ணாத்த படங்களில் நடித்தவர். அதன் பிறகு மலையாளத்திற்கு சென்று அங்கு முன்னணி நடிகரானார். மலையாளத்தில் 50 க்கும் மேற்பட்ட படங்களில் மம்முட்டி, மோகன் லால், பிருத்திவிராஜ் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். மலையாளத்தில் கதாநாயகனாகவும் வில்லனாகவும் படங்களில் நடித்துள்ளார்.

திடீரென உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பாலா அதற்கான சிகிச்சை பெற்று வந்தார். ஓராண்டு காலத்திற்குப் பிறகு தற்போது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு இயல்பு நிலைக்குத் திரும்பி விட்டார்.

மீண்டும் படங்களில் நடிப்பதற்காகக் கதை கேட்கத் தொடங்கி விட்டார். புதிய தமிழ் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் அது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளிவர இருக்கிறது.

தமிழில் புகழ்பெற்ற இயக்குநர் சிறுத்தை சிவாவின் தம்பி இவர் என்பதால் தமிழிலும் பட வாய்ப்புகள் வரும் என்று தெரிகிறது..அடுத்து நடிக்க இருக்கும் மலையாளம் மற்றும் தமிழ்ப் பட விவரங்கள் விரைவில் வெளியாகும் .

Leave A Reply

Your email address will not be published.