மழை பிடிக்காத மனிதன்: விஜய் ஆண்டனி படங்களில் பிரமாண்ட படம்

இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர் நிறுவனம் தயாரிக்கும் படம் ‘மழை பிடிக்காத மனிதன்’. விஜய் மில்டன் இயக்குகிறார். விஜய் ஆண்டனி, சரத்குமார், சத்யராஜ், மேகா ஆகாஷ் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

விழாவில் இயக்குநர் விஜய் மில்டன் பேசும்போது ” இந்தப் படம் மூலம் விஜய் ஆண்டனி சாருடன் இன்னும் நெருக்கமாக பழகுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. தொழில்நுட்ப கலைஞர்கள் எல்லோரும் சிறப்பாக செய்திருக்கிறார்கள். ‘கருடன்’, ‘மகாராஜா’ என சமீபகாலத்தில் தமிழ் சினிமா நல்ல படங்களைக் கொடுத்து வருகிறது. இந்தப் படமும் அந்த வரிசையில் சேரும்” என்றார்.

விஜய் ஆண்டனி, பேசியதாவது: என் நண்பர் விஜய் மில்டன் சாருடன் இணைந்து பணியாற்றி இருப்பது மகிழ்ச்சி. இந்தியாவின் தலைசிறந்த ஒளிப்பதிவாளர்களில் இவரும் ஒருவர். ‘பிச்சைக்காரன்’ படத்தில் அருமையான வேலை செய்திருப்பார். நான் இதுவரை பணிபுரிந்த படங்களில் பிரம்மாண்டமாக வந்துள்ள படம் இதுதான். சத்யராஜ் சார், சரண்யா மேம், முரளி ஷர்மா சார், டாலி தனஞ்செயன் என இத்தனை சீனியர் நடிகர்களுடன் நடிப்பேன் என நினைக்கவே இல்லை.

தயாரிப்பாளரும் எந்தவிதமான சமரசமும் இல்லாமல் நாங்கள் கேட்டதை எல்லாம் கொடுத்தார். இசை, கேமரா என எல்லா தொழில்நுட்ப கலைஞர்களும் சிறப்பாக பணிபுரிந்துள்ளனர். படத்தின் கடைசியில் கெட்டவனை அழிக்கக் கூடாது. கெட்டதைத்தான் அழிக்க வேண்டும் என்று சொல்லும் படம் இது. என்றார்.
==================

Leave A Reply

Your email address will not be published.